காய்ச்சலாம்... அன்னா ஹசாரேவை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம் ரத்து
புனே: உடல்நலக் குறைபாடு காரணமாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரேவைச் சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்கக் கூடாது என அக்கட்சியின் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் வைத்து அன்னா ஹசாரேவைச் சந்திக்க இருப்பதாகத் நேற்று தெரிவித்திருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், தற்போது காய்ச்சல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால், அன்னா ஹசாரே சந்திப்பு ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து போராட்டம்...
நீண்ட காலமாக வலுவான லோக்பால் மசோதாவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வருகிறார் அன்னா ஹசாரே. இதற்காக ஏற்கனவே அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

நடப்புத் தொடரிலாவது...
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

இன்று 3வது நாள்...
இதற்காக, நேற்று முந்தினம் தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

உறுதிப் போராட்டம்...
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்ப மாட்டேன், வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அன்னா ஹசாரே.

வரவேற்பு இல்லை...
இந்நிலையில், அவரது உண்ணாவிரதப் போராட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லையாம். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ஆம் ஆத்மி உத்தரவு...
அதற்குக் காரணம் கட்சி மேலிடத்தில் இருந்து வந்த தடை உத்தரவு தான் எனத் தெரிகிறது.அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தில் தனது கட்சித்தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என ‘ஆம் ஆத்மி' கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பதிலடி...
இதுபற்றி அந்தக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரத்தின்போது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதினார். அதை கவனத்தில் கொண்டுதான் இப்போது அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

ஹசாரே உத்தரவு...
ஆயினும், அன்னா ஹசாரே ஆதரவாளர்களோ, ஆம் ஆத்மிகட்சியினர் இப்போராட்ட மேடைக்கு வரக் கூடாது என ஹசாரே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அனுமதியில்லை....
உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய நாளன்று அன்னா ஹசாரே, ‘ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் எனது மேடை ஏற அனுமதியில்லை. காரணம் அவர்கள் அரசியலில் உள்ளனர்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு....
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. நாளை ( அதாவது இன்று ) அவரைச் சந்திக்க இருக்கிறேன்' என நேற்றுத் தெரிவித்திருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ரத்து...
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக இன்று தனது குருவான அன்னா ஹசாரேவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் நலமடைந்தவுடன் மீண்டும் சந்திக்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications