தெலுங்கானாவில் காவல் நிலையத்தில் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
கரீம்நகர்: தெலுங்கானாவில் 25 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் முஸ்தாபாத் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
போலீசார் அவரையும், அவரது கணவரையும் காவல் நிலையத்தில் வைத்து அறிவுரை வழங்கி ஒன்றாக வாழுமாறு கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் இன்று சிர்சில்லா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் காவல் நிலையத்தில் வைத்து பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உடனே போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த பெண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications