டெல்லியில் ஆட்டோவிலிருந்து கடத்தி 25 வயது பெண் பலாத்காரம் - 5 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஆட்டோவில் இருந்து கடத்தி, பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து செயல்பட்ட டெல்லி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நான்கு பேர் ஆட்டோவை மறித்து அப்பெண்ணைக் கடத்தியுள்ளனர்.
ராணுவ குடியிருப்பு பகுதிக்கு அப்பெண்ணைக் கொண்டு சென்ற கும்பல், அங்கிருந்த மற்றொரு நபருடன் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், நள்ளிரவு வேளையில் தெற்கு டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் சாலையோரமாக அப்பெண்ணை வீசிச் சென்றுள்ளனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பெண் முதலில் பயணம் செய்த ஆட்டோ டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து பலாத்காரம் செய்த 5 பேரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இதேபோல், டெல்லி ஜோதி நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி, பலாத்காரமாக கற்பழித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆட்டோவில் இருந்து இளம்பெண்ணை கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications