என்ன பொம்பளை புள்ளையா பெத்துட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா? நீ வேணாம்.. முத்தலாக் சொன்ன கணவர்!
மனைவிக்கு போனில் முத்தலாக் சொல்லி உள்ளார் கணவன்
கான்பூர்: "என்ன ஒரே பொம்பளை புள்ளையவே பெத்து போட்டுட்டு இருக்கே.. 5-வதும் பொண்ணா? எனக்கு நீ வேணவே வேணாம்" என்று சொல்லி மனைவிக்கு கணவன் முத்தலாக் தந்துவிட்டார்.
இதுநாள்வரை கல்யாணம் ஆன இஸ்லாமிய ஆண் ஒருவர், தன் மனைவியை 3 தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. இந்நிலையில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த ஆண்டு முதலே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், பின்னர் இந்த மசோதாவை கொண்டு வந்தது.
ஆனால், இது மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இருந்தாலும், முத்தலாக்கை தடை செய்து கடந்த பிப்ரவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

பிரதமர்
இப்போது மோடி 2-வது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, முத்தலாக் மசோதா திரும்பவும் கொண்டு வரப்பட்டு, அது கடந்த ஜூலை 25ந்தேதி, மக்களவையில் நிறைவேறியது. அதேபோல, கடந்த ஜூலை 30ந்தேதி, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு, அங்கும் நிறைவேறியது.

மெசேஜ்
முத்தலாக் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் சொல்லும் பலர் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இன்னமும் சில ஆண்கள் ஒரு சில காரணங்களை காட்டி முத்தலாக் சொல்லி கொண்டேதான் இருக்கிறார்கள். ஒருத்தர் மனைவிக்கு தபால் மூலம் முத்தலாக் சொன்னார், இன்னொருத்தர் வாட்ஸ்அப் மெசேஜில் முத்தலாக் சொன்ன சம்பவங்களும் நடந்து வருகின்றன.

கல்யாணம்
இப்போது, ஒரு மனைவிக்கு தொடர்ந்து பெண் குழந்தையாகவே பிறப்பதாக சொல்லி கணவர் முத்தலாக் தந்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண். 11 வருஷத்துக்கு கமீல் என்பவருடன் முன்பு கல்யாணம் ஆகி உள்ளது. இவர்களுக்கு 4பெண் குழந்தைகள் உள்ளனர்.

போனில் முத்தலாக்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரும்பவும் பெண் குழந்தை பிறந்தது. மனைவிக்கு 5-வதும் பெண் குழந்தை என்று கேள்விப்பட்டதால் டென்ஷன் ஆகிவிட்டார் கணவர். அதனால் மனைவிக்கு போன் செய்து, "என்ன ஒரே பொம்பளை புள்ளையவே பெத்து போட்டுட்டு இருக்கே" என்று கேட்டு முத்தலாக் தந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த முத்தலாக்கை ஏற்க மறுத்ததுடன் அஸ்மோலி ஸ்டேஷனில் கமில் மீது புகார் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications