வாந்தி எடுக்க பஸ் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண்.. துண்டாகி விழுந்த கொடூரம்!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண். அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது.
பன்னா என்ற ஊரில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து அதிவேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பலியான பெண்ணின் பெயர் ஆஷா ராணி, வயது 56 ஆகும்.

வெள்ளிக்கிழமை இவர் சத்னா மாவட்டத்திலிருந்து பன்னா மாவட்டத்துக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பன்னா நகரில் உள்ள டயமன்ட் கிராஸிங் பகுதியில் பஸ் வந்தபோது அப்பெண்ணுக்கு வாந்தி வருவது போல இருந்துள்ளது.
இதையடுத்து ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் அவரது தலை பலமாக மோதியது. பஸ் படு வேகமாக வந்து கொண்டிருந்ததால் மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் தலை நசுங்கி அப்படியே துண்டாகி விழுந்து விட்டது.
இந்த சம்பவத்தைப் பார்த்த பஸ்ஸில் இருந்தவர்களும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தை படு வேகமாக ஓட்டியதற்காக டிரைவர் கைது செய்யப்பட்டார்












Click it and Unblock the Notifications