பிரசவத்தின் போது மனைவி மரணம்- டாக்டரை துப்பாக்கியால் சுட்ட கணவர்!!
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் பிரசவத்தின் போது மனைவி இறந்தால் ஆத்திரம் அடைந்த கணவர் பிரசவம் பார்த்த பெண் டாக்டரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாசல்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபுதீன். இவரது கர்ப்பிணி மனைவி அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டார். இதனையடுத்து பாபுதீன் கடும் கோபம் அடைந்துள்ளார். இறந்த பெண்ணின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே டாக்டரின் கவனக்குறைவு காரணமாகதான் தனது மனைவி இறந்துவிட்டார் என்று கூறி பாபுதீன் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த டாக்டர் முனேஷ் தோமரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் முனேஷை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார். சுடப்பட்ட டாக்டருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாபுதீன் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications