டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்ப்பயா” சம்பவம் – ஓடும் பஸ்ஸில் ஓட்டுநர், நடத்துனரால் பெண் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்ஸில் திருமணமான பெண் ஒருவர் இரவு நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புறநகர் பகுதியான தாத்ரியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. பஸ்ஸில் ஏறிய அந்தப் பெண்ணை அப்பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Woman gang-raped on moving bus in Delhi

இதுகுறித்து போலீசார், "கன்னோஜ் பகுதியில் பேருந்தில் ஏறியுள்ளார் அப்பெண்மணி. ஆனால், இரவு நேரம் என்பதால் தான் இறங்க வேண்டிய பகுதியை பேருந்து அடைந்ததை அவர் அறியவில்லை.

இந்நிலையில் அவரை மீண்டும் தாத்ரி பகுதியில் இறக்கி விடுவதாக டெல்லியில் இருந்து பேருந்தினைத் திருப்பிய ஓட்டுநரும், நடத்துனரும் வழியிலேயே அப்பெண்மணியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அவரை தாத்ரி பகுதியில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதனையடுத்து அப்பெண்மணி போலீசில் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் அப்பெண்மணி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். தப்பியோடிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+