வரதட்சணை கொடுமை: இளம்பெண் எரித்துக் கொலை, 8 மாத குழந்தையும் கருகியது
பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் வரதட்சணை விவகாரம் தொடர்பாக 22 வயது பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கனன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபு. அவருக்கும் ஷன்னோ(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணமானது. அவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்த் பாபு தனது மனைவியிடம் அவரது பெற்றோரிடம் கேட்டு ரூ. 2 லட்சம் பணமும், பைக்கும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபு தனது தந்தை அதான் ஷா, தாய் சன்னி மற்றும் சகோதரர் அஹ்சான் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். அந்த பெண் எரிந்தபோது அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையும் உடல் கருகி பலியானது.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாபு, அவரது பெற்றோர் மற்றும் சகோதரரை புதன்கிழமை காலை கைது செய்தனர். விசாரணையில் நான்கு பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications