பெண்ணை ஈவ் டீஸிங் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த திமிர் ஆசாமி இவர் தான்!
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவர் டிராபிக்கில் தன்னிடம் அசிங்கமாக பேசி ஈவ் டீஸிங் செய்த நபரை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டதுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் திலக் நகரில் இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரிடம் அசிங்கமாக பேசி ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
திலக் நகரில் இரவு 8 மணி அளவில் ஒரு ஆண் அசிங்கமாக என்னிடம் பேசினார். அவர் வெள்ளி நிற ராயல் என்பீல்டு வாகனத்தில் வந்திருந்தார். அவரது வாகன எண் டிஎல் 4எஸ் சிஇ 3623. அவரை நான் புகைப்படம் எடுத்து போலீசில் புகார் அளிக்கப்போகிறேன் என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய். புகார் கொடு அதன் பிறகு நான் என்ன செய்கிறேன் என்று மட்டும் பார் என்று மிரட்டினார் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் டிராபிக் சிக்னலில் நடந்துள்ளது. அங்கிருந்த 20 பேர் இதை வேடிக்கை பார்த்துள்ளனரே தவிர யாரும் உதவ முன் வரவில்லை. ஈவ் டீஸிங் நபர் மீது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள போஸ்ட்டை 75 பேர் லைக் செய்துள்ளனர், 14 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications