டெல்லியில் கொடூரம்... தாய், 2 குழந்தைகள் கொலை... தூங்குவது போல் நடித்து தப்பிய 3 வயது சிறுமி!
டெல்லி: டெல்லியில் வீடு புகுந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக அடித்துக் கொன்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது தூங்குவது போல் நடித்ததால், 3 வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது.
டெல்லி ரகுபீர் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் ஷாபர். இவரது மனைவி சப்னம் (27). இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன்.
சம்பவத்தன்று ஜெய்ப்பூரில் இருந்து வீடு திரும்பிய ஷாபர் வீட்டுக் கதவை வெகுநேரம் தட்டியுள்ளார். பின்னர் தான் கதவு தாழ் இடம்படாமல் திறந்திருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கே சப்னம், அவரது ஒரு மகள் மற்றும் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மூன்று வயது பெண் குழந்தை மட்டும் அழுதபடி ஓடி வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஷாபர், உடனடியாக மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஷாபர் வீட்டு உரிமையாளரைக் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காரணம் சமீபகாலமாக ஷாபருக்கும் , அவரது வீட்டு உரிமையாளர் பரீக்கிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டைக் காலி செய்து விட ஷாபர் முடிவு செய்துள்ளார். ஆனால், அட்வான்ஸ் பணத்தை தர பரீக் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஷப்னத்தை கொல்லும் நோக்கிலேயே கொலையாளிகள் வந்திருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்பதால் அவர்களையும் சேர்த்து கொன்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிர் தப்பிய பெண் குழந்தை, சம்பவத்தின் போது உறங்குவது போல் நடித்ததால் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications