செகந்திராபாத்தில் கொடுமை.. காதலிக்க மறுத்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் தீவைத்து கொளுத்திய கொடூரன்
செகந்திராபாத்தில் பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பியோடிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செகந்திராபாத்: காட்சி ஊடகமான சினிமா பிற்காலத்தில் மக்களிடத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை உண்டு செய்யும் என்பது பிரபல நடிகர் சார்லி சாப்ளினின் பொன்மொழிகளில் ஒன்று.
அந்த வகையான மாற்றத்தில் ஒன்று தான் இத்தகைய செயல்களின் அடித்தளமாக கருதப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சிறிய தொழிற்கூடம் ஒன்றில் வரவேற்பாளராக வேலை செய்து வந்த பெண்ணை, வாலிபர் ஒருவர் காதலிப்பதாக தினமும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளான அப்பெண் இவ்விவகாரம் குறித்து தனது வீட்டில் தெரிவிக்காத நிலையில், காதலை மறுத்த அவரை அந்த நபர் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

மக்கள் முன்னிலையில்
கேனில் மண்ணெண்ணை எடுத்துக்கொண்டு வந்த அந்த நபர் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தற்போது படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திரைப்பட பாதிப்பு
இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். காதலிக்க மறுக்கும் பெண்ணை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று சினிமாவில் கதாநாயகன் செய்யும் செயல்கள், தற்போதைய தலைமறையினரின் மனதில் வெறித்தனமாக பதிந்து விடுகிறது.

படத்தை பார்த்து கெட்டு போகாதீங்க
திரையில் தன்னை வெறுக்கும் கதாநாயகியின் மனதை ஒருகட்டத்தில் கதாநாயகன் வென்று வெற்றிக்காண்பது போல நாமும் ஒருநாள் காதலில் வெல்வோம் என்ற நம்பிக்கையில் திரியும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஏமாற்றம்
இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் இத்தகையான கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து வருவதாக மனநல மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications