போலீஸ் பைக்கை சஞ்சய் ராய் ஓட்டியது எப்படி.. கொல்கத்தா போலீஸை கேள்வி எழுப்பும் பாஜக

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சி வழக்கு மேற்கு வங்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய் ராய் பயன்படுத்திய பைக்கை வைத்து பாஜக மற்றும் கொல்கத்தா காவல்துறை இடையே நடைபெறும் விவாதம் பரபரப்பாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற தினம் இரவு சஞ்சய் ராய் பயன்படுத்திய பைக் போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் பரபரப்புக்கான காரணம்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது பாலியல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தினசரி பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன..

kolkata police

இந்நிலையில் பாஜக ஐடி விங் தலைவரும், கொல்கத்தா பாஜக இணை பொறுப்பாளருமான அமித் மால்வியா தன் எக்ஸ் பக்கத்தில், "கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு பைக்கில் வலம் வந்துள்ளார். அந்த பைக் கொல்கத்தா போலீஸ் கமிஷனரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே கமிஷனர் தான் முதல்கட்ட விசாரணை நடத்துவதற்கு முன்பே அது தற்கொலை என்று கூறினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கமிஷனருடன் தொடர்பிலேயே இருந்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது முக்கியம். விசாரணை நேர்மையாக நடக்க மம்தா பானர்ஜியும், கமிஷனரும் உடனடியாக தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிபிஐ அவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும். அவர்களின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும். அந்த பெண் மருத்துவர் மருத்துவத்துறையில் உள்ள மோசடி குறித்து கண்டறிந்து காரணத்தால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

அவர் நுரையீரல் துறை நிபுணராக இருந்தார். காசநோய் போன்ற மருந்துகளுக்கு உள்ளூரில் தயாரிக்கப்படும் மருந்துகளை இங்கு வரி கட்டும் மக்களுக்கு கொடுக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அதற்கு பதிலாக இங்குள்ள நோயாளிகளுக்கு போலி மருந்துகள் கொடுக்கப்படுவதாக புகார் உள்ளது. இப்படி இதில் பல விஷயங்களை ஆராய வேண்டும். மம்தாவும், காவல்துறையும் ஏற்கனவே தடயங்களை அழித்துள்ளனர். எனவே இது சிபிஐக்கு கடினமாகத்தான் இருக்கும் என்று." கூறியுள்ளார்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் கொல்கத்தா காவல்துறை தங்களது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது. அதில் ,"சஞ்சய் ராய் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்திருந்த நிலையில் அதை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த பைக் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூகவலைதளங்களில் சிலர் குழப்பம் விளைவிக்கும் வகையில் பதிவுகளை பரப்பி வருகின்றனர். கொல்கத்தா காவல்துறையில் உள்ள அனைத்து வாகனங்களும் கமிஷனரின் பெயரில்தான் பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு பதிலளித்துள்ள அமித் மால்வியா கொல்கத்தா போலீஸ், சஞ்சய் ராய் போலீஸ் பைக் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதில் இருந்து சில சந்தேகங்கள் வருகின்றன. கொல்கத்தா போலீஸின் பைக் எப்படி சஞ்சயிடம் சென்றது. யார் வேண்டுமானாலும் கொல்கத்தா போலீஸின் பைக்கை பயன்படுத்தலாமா. இல்லையேல் பைக்கை வாடகைக்கு விட்டனரா. இந்த வழக்கில் இருந்து முக்கியமானவர்களை காப்பாற்ற மம்தாவின் அறிவுறுத்தல்படி சஞ்சய் ராய் மட்டும் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா. மம்தா பதவி விலகினால் மட்டுமே விசாரணை நேர்மையாக நடைபெறும்." என்றார்.

பாஜக, கொல்கத்தா போலீஸ் இடையேயான இந்த வாக்குவாதம் பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+