For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு.. 10 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு

10 கோடி பேருக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் வழங்கும் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஜேட்லி அறிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-2019

    டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக 10 கோடி பேருக்கு ஆண்டுக்கு 5லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

    மருத்துவ உலகில் சர்வதேச அளவில் இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இந்தியர்களின் மருத்துவ சிகிச்சை நிலை சமநிலைக்கு கீழ் உள்ளது தான் நிதர்சன உண்மை. இந்நிலையில் சாமானியனுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்க வேண்டும் என்பதே ஜனநாயக பங்காற்றல் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    Worlds largest Health Insurance Scheme

    இந்நிலையில் பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவித்த ஜேட்லி, உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார். அதாவது நாட்டில் உள்ள 10 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் அதேபோல 10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். இதற்காக அரசு ரூ. 1200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    English summary
    Worlds largest Health Insurance Scheme to be introduced soon in India, said Finance minister Arun Jaitley during the Budget address.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X