Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

300 கிமீ தூரத்திற்கு வரிசையாக நிற்கும் கார்கள்! உலகின் மிக பெரிய டிராபிக் நெரிசல்! திணறும் கும்பமேளா

Subscribe to Oneindia Tamil

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் பங்கேற்கப் பக்தர்கள் திரண்டு வரும் சூழலில், அங்கு மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பல சாலைகளில் போக்குவரத்தை மொத்தமாக முடக்கிய போதிலும் டிராபிக் குறையவில்லை. சுமார் 300 கிமீ தூரத்திற்கு டிராபிக் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இதை உலகின் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்துக்களின் புனித நிகழ்வாகும். இந்தாண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது.

mahakumbh mela 2025 2025 traffic uttar pradesh

மிக மோசமான டிராபிக்:

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது. அதன்படி நேற்று திடீரென மக்கள் மொத்தமாகத் திரண்ட நிலையில், பிரயாக்ராஜ் மட்டுமின்றி உபி எல்லை வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பெரிய டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்து கொள்ள நேற்று ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் பேர் திரண்ட நிலையில், அங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில ரூட்களில் 300 கிலோமீட்டர்கள் வரை கூட வாகனங்கள் டிராபிக்கில் சிக்கியுள்ளது.

உலகின் மிகப் பெரிய டிராபிக் நெரிசல்:

இது தொடர்பான போட்டோக்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், இதை "உலகின் மிகப் பெரிய டிராபிக் நெரிசல்" என்று குறிப்பிடுகிறார்கள். மத்தியப் பிரதேசம் வழியாக மகா கும்பமேளாவுக்கு நேற்று அதிகப்படியான மக்கள் வந்ததால் இந்த டிராபிக் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 200-300 கிமீ வரை டிராபிக் நெரிசல் நீண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அண்டை மாவட்டங்களில் சாலைகளை மூடி போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் வரை சாலையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

போலீசார் அறிவுறுத்தல்:

நேற்று முன்தினம் சனிக்கிழமையே மத்தியப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் டிராபிக் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சனிக்கிழமை அன்றை மத்தியப் பிரதேசத்தில் போலீசார வாகனங்களை சில மணி நேரம் வரை நிறுத்தி வைத்தனர். இப்போது அதை விட மோசமான டிராபிக் நெரிசல் பிரயாக்ராஜில் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு இதே நிலை தான் தொடரும் என்பதால் பொதுமக்கள் கும்பமேளா நடக்கும் இடத்திற்குச் சாலை மூலம் வர வேண்டாம் என்றும் கட்னி மற்றும் ஜபல்பூர் மாவட்டங்களிலேயே இருக்கும்படி போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டனர்.

சுமார் 200-300 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் இன்று யாரும் பிரயாக்ராஜ்ஜிற்கு வர வேண்டாம் என்று போலீசார் கூறியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் சாலைகளில் பல ஆயிரம் கார்கள் மற்றும் டிரக்குகள் வரிசையாக நிற்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னியில் இருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லை வரை 250 கிமீ தூரத்திற்கு டிராபிக் மோசமாக இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

mahakumbh mela 2025 2025 traffic uttar pradesh

என்ன காரணம்:

இது தொடர்பாக உள்ளூர் போலீசார் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் மகா கும்பமேளாவுக்கு வந்ததே டிராபிக் இந்தளவுக்கு மோசமாகக் காரணம். தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால் டிராபிக் சீராகக் குறைய ஒரு சில நாட்கள் ஆகும். பிரயாக்ராஜ் நகரில் என்ன நிலைமை என்பதைக் கேட்டு போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

வெறும் 50 கிமீ தூரத்தைக் கடக்கவே 10 முதல் 12 மணி நேரம் வரை ஆவதாகவும் பல மணி நேரமாக ஒரே இடத்தில் சிக்கியிருப்பதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். என்ன தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தை நிறுத்தினாலும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்.

கூட்டம் குறையவில்லை:

தொடர்ந்து பக்தர்கள் தங்கள் சொந்த வாகனத்தில் கிளம்பி வருவதால் ரேவா-பிரயாக்ராஜ் சாலையில் மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குக் கூட்டம் அதிகரித்து வரும் சூழலில், இதை உலகின் மிகப் பெரிய டிராபிக் ஜாம் என்றே அங்குச் சிக்கியுள்ளவர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+