குஜராத்தில் பிரசாரத்தில் குதிக்கும் யஷ்வந்த் சின்ஹா... பயங்கர அதிர்ச்சியில் பாஜக

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்க வைக்க முடியுமா என தவித்து வரும் பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா அதிர்ச்சி களமிறங்கப் போவது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் இந்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலில் பாஜக வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே அக்கட்சியினரே கருதுகின்றனர்.

Yashwant Sinha to campaign against BJP in Gujarat

பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த பட்டேல் சமூகத்தினரும் வர்த்தகர்களும் அக்கட்சிக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி இழந்து போன ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் மூத்த பாஜக தலைவரான யஷ்வந்த் சின்ஹா குஜராத்தில் பிரசாரம் செய்யப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் ஆதரவு என்.ஜி.ஓ ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்குகளில் யஷ்வந்த் சின்ஹா கலந்து கொள்ள இருக்கிறார்.

குஜராத்தில் வாழ்வா? சாவா என போராடிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் எதிர்பிரசாரம் பேரதிர்ச்சியைத்தான் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior BJP leader Yashwant Sinha will travel to Gujarat on an invitation from an NGO supported by the Congress party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற