கவுதமிக்கு சம்பளம் கொடுத்தாச்சா இல்லையா? என்ன சொல்கிறார் கமல்?
கவுதமிக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: கவுதமிக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தில் கமல்
இந்நிலையில் தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார்.

அங்கீகாரம் கிடைக்கும்
அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தற்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பேசினாலே குற்றம்
மேலும், கட்சியின் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். சேலத்தில் அமைய உள்ள பசுமை வழித்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

சம்பளம் கொடுத்துவிட்டீர்களா?
அப்போது சம்பள பாக்கி இருப்பதாக கவுதமி குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கவுதமியின் சம்பள பாக்கியை கொடுத்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பினர்.

கவுதமி கூறவில்லையா?
அதற்கு பதிலளித்த கமல் கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டேன் என்றார். சம்பளம் கொடுக்காததை கூறிய கவுதமி சம்பளம் கொடுத்ததை உங்களிடம் தெரிவிக்கவில்லையா என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications