யோகா எதிர்ப்பாளர்கள் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும்.. புது சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி..
டெல்லி : அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி தற்போது மேலும் ஒரு அதிரடி கருத்தைத் தெரிவித்து ஊடகங்களுக்கு தீனி போட்டுள்ளார்.
யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் அவர் கூறியுள்ளது டெல்லி வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்வி, அழைப்பிதழ் அனுப்பிதான் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கு டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது அரசியல்வாதி தலைவர்களின் மகளின் திருமண நிகழ்ச்சி அல்ல என்றார்.
இணைப்பு பாலமாக செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியாவின் பாரம்பரியங்களுக்கும், கலாசாரங்களுக்கும் ஆட்சேபனை தெரிவிப்பது ஒருபோதும் ஜனநாயகம் ஆகாது என்றும் சாத்வி கூறினார். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதை நானும் பல நாட்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லி யோகா விழா தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக பேசிய சாத்வி பிராச்சி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் அவர்களாகவே தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து ஆட்சேபம் தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தார். அப்படி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் இந்தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம் எனவும் சாத்வி பிராச்சி கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications