போலீஸ் ஸ்டேஷனுக்கு விசிட் அடிக்கும் சி.எம்.. துடைப்பத்தால் பெருக்கும் அமைச்சர்.. கண்ணு வேர்க்குதே
லக்னோவின், ஹஜ்ராத்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், கைதிகள் அடைக்கப்படும் அறைகள் மற்றும் வசதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஆய்வு நடத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் எந்த வித சமரசமும் கிடையாது என்று அவர் காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசியாபாத், மீரட், நொய்டா, லக்னோ ஆகிய நகரங்களில் பணியில் இருந்த காவல்துறையினரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட முதல்வர், நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.

தலைநகரில் ஆய்வு
லக்னோவின் பஜார் பகுதியான, ஹஜ்ராத்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள், கைதிகள் அடைக்கப்படும் அறைகள் மற்றும் வசதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.

எச்சரித்த முதல்வர்
காவல் நிலையம் முழுவதும் சுற்றி ஆய்வு செய்த பின், முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், ''மாநிலத்தில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுதான் என் முதல் பணி. அதற்காக, எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசு தயங்காது" என்றார்.

குப்பை சுத்தம்
இது ஒருபுறம் என்றால், அமைச்சர்களும் முழு வீச்சில் பணியை தொடங்கிவிட்டனர். அமைச்சர் உபேந்திர திவாரி, நேற்று காலை, தன் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு குப்பை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. எனவே, அமைச்சர் தானே துடைப்பத்தை எடுத்து, சுத்தம் செய்ய துவங்கினார். இதை பார்த்த அதிகாரிகளும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து ஸ்தம்பித்து நின்றனர்.
இதன்பின், அலுவலக உதவியாளர், அமைச்சரின் கையிலிருந்து துடைப்பத்தை வாங்கி, அலுவலகத்தை சுத்தம் செய்தார்.

பான் மசாலா தடை
அரசு அலுவலகங்களில் வெற்றி பாக்குபோடுவது, பான் மசாலாக்கள் சுவைப்பது போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபட கூடாது என்று யோகி ஆதித்யநாத் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications