துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் உடல் சிதறி பலி; பலர் படுகாயம் !
இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இஸ்தான்புல் நகரின், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் சுல்தானாக்மெட் பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உடல் சிதறி பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் பலியானோர் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான உடல்கள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என்றும் வெடிகுண்டு நிறப்பட்ட கார் வெடிக்கச் செய்யப்பட்டது என்றும் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், ''மிகவும் பலத்த வெடிச்சத்தம் கேட்ட போது. நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். வெளியே ஓடியவந்து பார்த்த போது பல சடலங்கள் சிதறி கிடந்ததை பார்த்தோம்" என்றார்.
இதனிடையே இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இது எவ்வகையான வெடிவிபத்து என்பது குறித்து புலானய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், யார் இச்செயலில் ஈடுபட்டனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே குண்டு வெடித்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர்.காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவ்பிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஸ் தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications