For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழடி நம் தாய்மடி.. அமெரிக்காவில் ஜூலையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை : தமிழ் எண் மைல்கல் கண்டுபிடிப்பு.. 18- ம் நூற்றாண்டில் நடப்பட்டதாக தகவல்..!

    சிகாகோ: 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் 32-ம் ஆண்டு தமிழ் விழாவும் "கீழடி நம் தாய்மடி" எனும் கருப்பொருளில் ஜூலை மாதம் 4-ந் தேதி முதல் 7ந் தேதி வரை சிகாகோவில் நடைபெற உள்ளது.

    வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் தமிழ் விழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் என அமர்க்களப்படும் பெட்னா தமிழ் விழா.

    10th International Conference seminar on TamilStudies at Chicago

    இந்த ஆண்டு 32-வது பெட்னா தமிழ் விழா நடைபெற உள்ளது. அத்துடன் தமிழக அரசின் ஆதரவுடன் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-ம் ஆண்டு விழாவும் இணைந்து நடைபெற உள்ளது. சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழிசை, கவிஞர் சல்மா தலைமையில் கவியரங்கம், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், செந்தில்- இராஜலட்சுமியின் மரபிசை, யுவன் குழுவினரின் மெல்லிசை இரவு என இந்த ஆண்டு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்! ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்!

    10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏராளமான தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடைபெற உள்ளன. தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மாஃ.பா பாண்டியராஜன் இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

    10th International Conference seminar on TamilStudies at Chicago

    தமிழ்ச் சொற்கள் அனைத்தையும் தொகுத்து வரிசைப்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைகளை பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் அடங்கிய சொற்குவை திட்டம் எனும் பெயரில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இணையதளம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் ஈழத்தில் நடனமும் பாரம்பரியமும், மாவீரன் இராஜேந்திரச் சோழனின் வரலாற்று நாடகமும் இந்த விழாவில் அரங்கேற்றப்படுகிறது.

    English summary
    10th International Conference seminar on TamilStudies will holt at Chicago on July 4-7.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X