பலத்த சத்தத்துடன் நள்ளிரவில் பூஜை... குவைத்தில் 11 இந்தியர்கள் கைது
குவைத்: குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்ததாக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குவைத்தில் நவசைதன்யா நல சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குவைத்தின் மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் நடந்த பூஜையில், பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அக்கம்பக்கத்தார், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், பூஜையில் ஈடுபட்ட 11 இந்தியர்களைக் கைது செய்தனர்.
குவைத் சட்டப்படி எந்த வழக்கில் கைது செய்தாலும் அவர்களை 10 நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவில்லை.
இதுகுறித்து உடுப்பி- சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications