For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சத்தில் உக்ரைன் போர்! ரஷ்ய தாக்குதலில் 113 சர்ச், 200 புராதான சின்னங்கள் அழிப்பு! ‛பகீர்’ தகவல்

Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்துள்ள நிலையில் 113 தேவாலயங்கள், 200 பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய படைகள் தொடரச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் இன்னும் ரஷ்யாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது தான் போர் 100 நாட்களை தாண்டியும் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.

ரஷ்யா vs ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவிற்கு அடிச்ச லக்.. சலுகை விலையில் கச்சா எண்ணை.. சூப்பர் சான்ஸ் ரஷ்யா vs ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவிற்கு அடிச்ச லக்.. சலுகை விலையில் கச்சா எண்ணை.. சூப்பர் சான்ஸ்

 போர் குற்றம் புரிகிறதா ரஷ்யா?

போர் குற்றம் புரிகிறதா ரஷ்யா?

இந்நிலையில் தான் ரஷ்யா மீதும், ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுகிறது. படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டில் வன்புணர்வு செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றங்களை சுமர்த்தி வருகிறது.

உக்ரைன் அதிபர் பேச்சு

உக்ரைன் அதிபர் பேச்சு

மேலும் உக்ரைனின் நிலை பற்றி அடிக்கடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மூலம் பேசி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது உரையாற்றினார். அதில் அவர் ரஷ்யா மீதும் மீண்டும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுபற்றி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:

113 தேவாலயங்கள் அழிப்பு

113 தேவாலயங்கள் அழிப்பு

உக்ரைனில் இதுவரை தேவாலயங்கள், பாரம்பரிய சின்னங்கள் என 300க்கும் அதிகமானவை சேதப்படுத்தப்பட்டு ள்ளன. குறிப்பாக ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன. அழிக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான தேவாயலங்கள் 2ம் உலகப்போரில் நாஜி படைகளை எதிர்த்து நின்ற பெருமை கொண்டவையாகும். 2ம் உலக போரை கூட தாங்கிய தேவாலங்களால் ரஷ்யாவின் தாக்குதலை தாங்கி நிற்க முடியவில்லை. இது துரதிர்ஷ்டமானது. மிகவும் கொடுமையானது'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.

தீப்பற்றி எரியும் மடாலயம்

தீப்பற்றி எரியும் மடாலயம்

மேலும், கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவில் உள்ள பழமையான மடாலயம் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கி இருந்த நிலையில் அது தீப்பற்றி எரிந்தது. இதற்கும் ரஷ்ய படைகளின் தாக்குதல் தான் காரணம் எனக்கூறி உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி கோசேவெங்கோ 'பேஸ்புக்' பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு மடாலயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

English summary
Ukraine - Russia ‛‛Crisis: Russian Artillery has destroyed more than 113 churches and 200 heritage sites across the country’’, claims Ukraine President Volodymyr Zelensky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X