அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்ட புஸு புஸு பூனை.. 12 ஆயிரம் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
ஜாக்ரேப்: குரோடியாவில் உள்ள ஒரு வரலாற்று அரண்மனையிலிருந்து 17 வயது பூனை வெளியேற்றப்பட்ட பிறகு அங்கிருந்த மக்கள் என்ன செய்தனர் தெரியுமா?
அனாஸடேசியா எனும் பூனையானது குரோடியாவின் சுற்றுலா தலமான டூப்ரோவ்நிக் எனும் பகுதியில் இருந்த அரண்மனையின் வெளியே இருந்து வந்தது.
அழகாக புஸு புஸு என இருப்பதாலும் அமைதியாக இருப்பதாலும் அந்த பகுதி மக்களுக்கு நல்ல பரீட்சயமானது இந்த பூனை. மேலும் இந்த பூனை மீது மக்கள் அன்பு செலுத்தி வந்தனர்.

வசிப்பிடம்
அது தனக்கான ஒரு வசிப்பிடத்தை தேடி கொண்டாலும் அன்றாடம் அரண்மனைக்கு வருவதை அது நிறுத்தவே இல்லை. இதனால் பூனைக்காக அரண்மனை வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒரு கார்டுபோர்டால் ஆன பெட்டியை அரண்மனையின் தாழ்வாரத்தில் செய்து வைத்தனர்.

இருப்பிடம்
அதன் இருப்பிடம் மியூசியத்தின் அதிகாரிக்கு தெரியாது. ஆனாலும் அந்த பூனை அரண்மனைக்கு செல்வதை விடவே இல்லை. இதையடுத்து விலங்கு நல ஆர்வலர் ஒருவர் பூனைக்கு அரண்மனைதான் பிடித்திருக்கும் என நினைத்து மரக்கட்டையால் ஆன ஒரு அரண்மனையை பிரபல கட்டடக்கலையின் மாதிரியை வைத்து செய்திருந்தார்.

நேம் போர்டு
அதற்கு அனாஸ்டாசியா இல்லம் என்ற பெயர் பொருந்திய போர்டையும் வைத்திருந்தார். இந்த குடியிருப்பு வைத்திருந்தது எப்படியோ அரண்மனை காவலர்களுக்கு தெரிந்து விட அதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். டூப்ரோவ்னிக் என்பது தனித்துவமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தின் தோற்றத்தையே மாற்றும் அளவுக்கு தனியாக குடியிருப்புகளை அமைக்க மியூசியம் அதிகாரி அனுமதிக்கப்படவில்லை.

காவலர்கள்
எனவே இதை அகற்ற வேண்டும் என காவலர்கள் தெரிவித்தனர். இதற்கு பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பூனையை அரண்மனைக்குள் விட வேண்டும் என கோரி 12 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து போட்டிருந்தனர். இந்த அரண்மனை அதனுடைய வீடு, நாங்கள் பேசுவது ஒரு பூனைக்காக மட்டும்தான், 70 பூனைகளுக்கு அல்ல என பலர் வாதிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications