ஒரே நாளில் அனைவரையும் கலங்கடித்த வீடியோ.. மகள் பாட பாட.. டிவியில் பார்த்தபடி.. உயிரை விட்ட தாய்!!
மகள் பாடுவதை டிவியில் பார்த்து கொண்டே உயிரைவிட்டுள்ளார் தாய்
Recommended Video
ஜகார்த்தா: தாயின் மருத்துவ செலவுகளுக்காக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மகளை டிவி நேரலையில் பார்த்தபடியே அவரது தாய் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அந்த உருக்கமான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயின் மருத்துவ செலவிற்காக.. மகள் பாட்டு போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பாடியபோது அந்த தாயின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.

இந்தோனேஷியாவில் லிகா தங்கத் என்ற பாட்டு போட்டி நடந்தது.. இதில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு 28,000 யூரோ பரிசாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள சிதி நுர் ஜன்னா ருமாஸூகுன் என்ற 14 வயது சிறுமி விரும்பினார்.. காரணம், இந்த சிறுமியின் அம்மா படுத்த படுக்கையாக இருந்ததுதான். வீட்டிலும் பெரிதாக வசதியும் இல்லை.
14 வயது சிறுமியான தன்னால் பெரிதாக உழைத்து, அந்த பணத்தில் அம்மாவுக்கு வைத்தியம் பண்ண முடியாது என்பதை அறிந்த சிறுமி, தன்னிடமுள்ள பாட்டு திறமையை வைத்து, பரிசு பெற்று.. அம்மாவின் மருத்துவ சிகிச்சை செய்யலாம் என எண்ணினார்.
அதற்காகவே இந்த பாட்டு போட்டியிலும் வந்து கலந்து கொண்டார்... ஒவ்வொரு முறை நடத்தப்பட்ட போட்டியிலும் ஜன்னாவிடம் ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.. எப்படியாவது இந்த கட்ட போட்டியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு போய்விட வேண்டும் என்ற முனைப்பும் துளைத்தெடுத்தபடியே இருந்தது.
அதற்கேற்றார்போல் இனிமையாக பாடி, ஒவ்வொரு கட்டமாக தாண்டி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்து.. அதில் இருந்தும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அம்மாவிடம் ஓடினாள் சிறுமி... "அம்மா.. நான் ஃபைனலுக்கு போக போறேன்.. நிச்சயம் ஜெயிச்சிட்டுதான் வருவேன்.. லைவ் டிவியில நான் பாடுவதை பாரும்மா பாரும்மா" என்று மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு கிளம்பினார்.
இறுதி போட்டியும் ஆரம்பமானது.. நேரலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பும் ஆனது.. மகள் ஜன்னா பாடுவதை அவரது அம்மா நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார். 'என்ன ஒரு இனிமையான குரல்.. இந்த சின்ன வயதில் தன் மீது எத்தனை அன்பு.. எத்தனை பாசம்.. தன் வைத்திய செலவுக்காக மகள் பாடுவதை நினைத்து, திகைத்து போய் மலைத்தார்.. அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணிலிருந்து கண்ணீர் வரத் துவங்கியது.
ஜன்னா அந்த பாடலை பாடி முடிக்கும்போது சரியாக அவரது அம்மாவின் உயிரும் பிரிந்து விட்டது... இது லைவ் நிகழ்ச்சி போட்டியில் இருந்த ஜன்னாவுக்கு தெரியாது.. அந்த சமயத்தில், ஜன்னா வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டார்... உடனே விழாவில் பங்கேற்றவர்கள் ஜன்னாவை புகழ்ந்து பேசி கொண்டிருந்தனர்.. ஜன்னாவும் அப்போது மேடையில்தான் இருந்தார்..
"எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினீர்கள்" என்று மேடையில் இருந்தோர் கேட்க, "என் அம்மாவுக்காக மட்டும்தான்" என்று பதிலளித்தார் ஜன்னா. அப்பொழுதுதான் போன் மூலம் அவரது வீட்டினர் தகவல் சொன்னார்கள்.. இதை உடனே ஜன்னாவிடம் சொல்ல.. அம்மா இறந்த தகவலை கேட்டு... ஜன்னா மேடையிலேயே கதறி அழ துவங்கி விட்டார்.
மேடை நிகழ்ச்சிகள் லைவ்-ஆக சென்று கொண்டிருந்தபோது, ஜன்னா கதறி அழுவதும் சேர்ந்தே ஒளிபரப்பானது.. இதை பார்த்து கொண்டிருந்த அங்கிருந்த ரசிகர்கள் கண்கலங்கி அழ தொடங்கினர்... பொதுமக்கள் உட்பட எல்லோருக்குமே ஒரே நேரத்தில் இந்த சோகம் பீடித்து கொண்டது.. கதறி அழுத ஜன்னாவை மேடையில் இருந்தோரால் மட்டுமல்ல, யாராலுமே சமாதானப்படுத்த முடியவில்லை.. தன் அழுகையை ஜன்னா எப்போது நிறுத்தினார் என்று தெரியாது!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications