அந்த 15 நிமிடம்.. ஒரு டின்னரில் மொத்தமாக அழிந்து போன நேபாள அரசு குடும்பம்.. என்ன நடந்தது தெரியுமா?
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று தேர்தல் நடக்கிறது. நேபாளம் வெறும் 18 ஆண்டுகளாக மட்டுமே மக்களாட்சியாக இருக்கிறது. அதற்கு முன்பு 240 ஆண்டுகள் மன்னராட்சியே இருந்தது. மிக வலுவாக இருந்த நேபாள மன்னராட்சி, வெறும் 15 நிமிடத்தில் காலியானது. அங்கு என்ன நடந்தது.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்த 2001 ஜூன் 1ம் தேதி நேபாளத்தின் நாராயண்ஹிடி அரச அரண்மனையில் ஷா குடும்பத்தினர் இரவு விருந்திற்காகக் கூடியிருந்தனர். வெளியிலோ, காத்மாண்டு நகரம் மெதுவாக உறங்கிக் கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணியளவில், ஒரு சாதாரணக் குடும்பச் சந்திப்பு, வெறும் 15 நிமிடங்களுக்குள் மன்னர் மற்றும் வாரிசுகள் சுட்டுக் கொல்லப்பட்டு பெரும் துயரத்தில் முடிந்தது.

இரவு விருந்து
அந்த விருந்தில், 1990இல் நேபாளத்தை அரசியலமைப்பு மன்னராட்சியாக மாற்றிய மன்னர் வீரேந்திரா, ராணி ஐஸ்வர்யா மற்றும் பட்டத்து இளவரசர் திபேந்திரா ஆகியோர் பங்கேற்றனர். திபேந்திரா அதிக மது அருந்தியதுடன், தேவயானி ராணாவை மணக்கும் விருப்பத்தை அரச குடும்பத்தினர் எதிர்த்ததால் கோபத்துடனேயே இருந்துள்ளார். பட்டத்து இளவரசர் திருமணம் செய்து கொள்ள விரும்பிய தேவயானி ராணா, நேபாள அரசியல்வாதி பசுபதி சாம்ஷேர் ஜங் பகதூர் ராணா மற்றும் உஷா ராஜ் சிந்தியாவின் மகள் ஆவார். இந்தியாவில் மறைந்த மாதவராவ் சிந்தியா, வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட குவாலியர் முன்னாள் அரச குடும்பத்துடனும் அவருக்கு உறவு இருந்தது.
துப்பாக்கிச் சூடு
மாலை நேரம் செல்லச் செல்ல திபேந்திரா கோபத்தின் உச்சத்திற்குப் போய் கொண்டு இருந்தார். இரவு 9 மணிக்குச் சற்று முன்னர், அவர் தடுமாற்றம் மோசமடைந்தது. இதையடுத்து பில்லியர்ட்ஸ் அறையை விட்டு தனது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் போன பிறகும் இரவு விருந்து தொடர்ந்து நடந்துள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு, திபேந்திரா போர்க்கவச உடை, தானியங்கி ஆயுதங்களுடன் உணவு மண்டபத்திற்குள் நுழைந்து சுடத் தொடங்கினார். அப்போது என்ன நடந்தது என்பதை இளவரசரின் மாமா ரவி சம்ஷெரே ராணா டைம் பத்திரிகையிடம் கூறுகையில், "திபேந்திரா தனது தந்தையைப் பார்த்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரே நொடியில் ட்ரிக்கரை அழுத்தினார்" என்றார்.
மன்னர் குடும்பம்
முதலில் மன்னர் வீரேந்திரா சுடப்பட்டார். சிலர் தடுக்க முயல, மற்றவர்கள் தப்பிக்க ஓடினர். அரண்மனை கூடங்கள் முழுவதும் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. கண்ணாடிகள் சிதறின. தனது கணவரைக் காப்பாற்றச் சென்ற ராணி ஐஸ்வர்யா, இளவரசர் நிரஞ்சன், இளவரசி ஸ்ருதி உள்ளிட்டோர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. வெறும் சில நிமிடங்களுக்குள்ளேயே பல அரச குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். விருந்து நடக்கும் இடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், பின்னர் அரண்மனை தோட்டத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பல சுற்றுச் சுட்ட பிறகு, திபேந்திரா தன்னை தானே சுட்டுக்கொண்டார். மிக மோசமான காயங்களோடு அவர் மீட்கப்பட்டார்.
அரண்மனை ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தவர்களை சௌனியில் உள்ள பீரேந்திரா ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பல அரச குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர்.. வெறும் 15 நிமிடத்தில் நேபாள அரச குடும்பம் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது. மயக்க நிலையில் இருந்தபோதிலும், அரசமைப்புச் சட்டப்படி துப்பாக்கிச் சூடு நடத்திய திபேந்திராவே மன்னராக அறிவிக்கப்பட்டார். இதனால் நேபாளம் மூன்று நாட்கள் கோமா நிலையில் ஒரு மன்னரைக் கொண்டிருந்தது. 2001 ஜூன் 4 அன்று அவர் சுயநினைவு பெறாமலேயே இறந்தார்.
15 நிமிட சம்பவத்தால் முடிந்த மன்னராட்சி
பட்டத்துரிமை பின்னர் மன்னர் வீரேந்திராவின் இளைய சகோதரரான ஞானேந்திராவுக்குச் சென்றது; அவர் அந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது தான் நேபாளம் மாவோயிஸ்ட் கிளர்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் போராடிக் கொண்டிருந்தது. சரியாக இந்த நேரத்தில் இந்த படுகொலை நடந்ததால் மன்னராட்சி மீதான மக்கள் நம்பிக்கை மொத்தமாக இல்லாமல் போனது.
2005இல் மன்னர் ஞானேந்திரா அரசின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றபோது, மக்கள் கோபம் மேலும் அதிகரித்தது. இறுதியாக, 2008இல், 240 ஆண்டுக்கால மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த நேபாளம், முழுமையாக மக்களாட்சியை நோக்கி நகர்ந்தது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications