தற்கொலைப்படை ஆளாகிவிடுங்கள்: ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சனா: மொராக்கோவைச் சேர்ந்த இரண்டு செக்ஸ் அடிமைகளுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொண்டதால் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள 16 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தற்கொலைப்படை தாக்குதலை நடத்த உதவுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளில் 16 பேர் மொராக்கோவைச் சேர்ந்த 2 செக்ஸ் அடிமைப் பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஹெச்ஐவி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிரியாவில் உள்ள அல் மாயாதீன் நகரில் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 ISIS fighters who contracted HIV from two Moroccan sex slaves are ordered to become suicide bombers

மொராக்கோவைச் சேர்ந்த அந்த 2 பெண்களுக்கு ஹெச்ஐவி இருப்பது தெரியாமல் தீவிரவாதிகள் அவர்களுடன் உறவு வைத்துள்ளனர். அந்த 16 பேரையும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உதவுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அந்த இரண்டு பெண்களும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து துருக்கிக்கு தப்பியோடிவிட்டனர். முன்னதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி வேண்டும் என்றே எய்ட்ஸ் நோயை 15 வயது யசிதி இன சிறுமிக்கு பரப்பிவிட்டது மற்றும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் மருத்துவமனையில் ரத்ததானம் செய்தது தெரிந்து அவர் கொலை செய்யப்பட்டார். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் முன்பே அவருக்கு எய்ட்ஸ் இருந்துள்ளது.

அவர் அளித்த ரத்ததை பெற்ற எகிப்தைச் சேர்ந்த தீவிரவாதி மற்றும் அவர் உறவு வைத்த அந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 சவுதிக்காரர்களுக்கு ஹெச்ஐவி தாக்குதல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+