"டேஞ்சர்".. 170 கோடி மக்களாம்.. மின்னல் வேகத்தில் பரவும் பட்டினி.. என்ன காரணம்? ஐ.நா சொல்வது என்ன?
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக, உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி கொண்டு இருப்பதாக ஐநா கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தி வருகிறது.. பல்வேறு நாடுகள் ரஷ்யாவை அறிவுறுத்தியும் கேளாமல், உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகிறது.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
மற்றொருபுறம், உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது.. இப்படி இரு தரப்பிலும் போர் நடந்து வரும் நிலையில், ஏராளமான வீரர்களும், அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்...

உக்ரைன்
உயிர் பயத்தில் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்... மாதக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்த போரில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்... ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, உலக நாடுகளில் விலைவாசியும் உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.. இதற்கு உக்ரைன் போர்தான் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.

கோதுமை
கடைசியில் உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததால் நாட்டில் கோதுமை விலையும் உயர்ந்து வருகிறது.. எனவே, அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பல்வேறு உலக நாடுகள் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.. அந்த உதவிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் செய்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது...

பட்டினி அபாயம்
ஐநா சபையின் பொதுசெயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் இதுகுறித்து சொன்னதாவது: "உக்ரைனில் போர் மக்களை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடக்கிறது.. இன்னும் இந்த பணி நீடிக்கும். எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள்... காரணம், இந்த போரினால், உணவு பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுளள்ன.. உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவ ஆரம்பித்து விட்டன.. இதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

வறுமைநிலை
முன்னதாக இன்னொரு பேட்டி ஒன்றில் ஆண்டோனியோ இதை பற்றி சொல்லும்போது, 170 கோடி மக்கள் பசி, பட்டினி மற்றும் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள்... உக்ரைன், ரஷ்யா 2 நாடுகளுமே கோதுமை, பார்லியை 30 சதவீதம் உற்பத்தி செய்கின்றன.. 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை இந்த 2 நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன..

கோதுமை, சோளம்
ஆனால், 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கோதுமை, சோளத்தின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.. கச்சா எண்ணெய் விலையும் 60 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துவிட்டது.. எரிவாயு விலையும் டபுள் மடங்காகிவிட்டது.. இதனால் என்ன நடக்கும் என்றால், பணக்காரர்களின் சொத்து மதிப்பு இன்னும் உயரும், வழக்கம்போல், ஏழைகளின் வறுமை இன்னும் உயரும்.. இதை தடுக்க உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.