பப்புவா நியூ கினியா நிலச்சரிவு... மண்ணில் உயிரோடு புதையுண்ட 2,000 பேர்.. அதிர்ச்சி தகவல்!
போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆஸ்திரேலியா அருகே உள்ளது பப்புவா நியூகினியா நாடு. இந்த நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை முதலில் 100 ஆக இருந்தது. பின்னர்தான் நிலச்சரிவின் கோர முகமே வெளியே தெரிய தொடங்கியது. பப்புவா நியூகினியாவில் 670 பேர் மண்ணில் புதையுண்டு போனதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது இந்த நிலச்சரிவில் சுமார் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போயிருக்கக் கூடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மண்ணில் புதையுண்டு போன 2,000 பேரை மீட்க முடியுமா? என்பது தெரியாமல் அந்த நாடு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. உறவுகளின் உடல்களையாவது தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொதுமக்களே களமிறங்கி இருக்கின்றனர்.
மேலும் சில இடங்களில் 30 அடி ஆழத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த இடங்களில் மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாது மீட்பு குழுவினர் தவிக்கின்றனர். தற்போதைய நிலையில் பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதியாக சொல்ல முடியாத நிலைமை இருக்கிறது என்கின்றனர் மீட்பு குழுவினர்.
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணம்தான் மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ளது. இத்தனை ஆயிரம் பேரை தேடுவதற்கு போதுமான மீட்பு கருவிகள் இல்லை என்பது இன்னொரு துயரம். இந்த மீட்பு கருவிகள் வந்த பின்னரே மண்ணில் புதையுண்ட ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியே தொடங்கப்படும் எனவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
அதேநேரத்தில் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடருவதாகவும் அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications