"மர்மம்".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! "காரணம் எல்லாம் தெரியாது".. சீனா ஷாக் விளக்கம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலுக்கு பின்னால் பல சதி வேலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய மருத்துவ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 20 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளும் வாய்திறக்க மறுக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சீன சுகாதாரத் துறை உயரதிகாரிகள், "விஞ்ஞானிகள் இறந்துபோனது உண்மைதான். ஆனால், காரணம் எல்லாம் தெரியாது" என தடாலடியாக தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன்முதலில் தெரிவித்த மருத்துவர், தொற்று குறித்து வெளிப்படையாக பேசிய விஞ்ஞானிகள் ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர். அதுபோலவே, இந்த விஞ்ஞானிகளின் மரணங்களும் இருக்குமா என உலக நாடுகள் சந்தேகிக்கின்றன.

சீனா என்றொரு "மர்மதேசம்"
பொதுவாகவே, சீனாவில் நடக்கும் எந்தவொரு விஷயமும் அது வெளி உலகுக்கு தெரியாது. அவ்வாறு தெரிவிக்க சீனாவுக்கும் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. அது அணுகுண்டு, ஏவுகணை சோதனை என எதுவாக இருந்தாலும் சரி. அதனால்தான், சீனாவை 'இரும்புத் திரை நாடு' என உலகம் அழைக்கிறது. இப்படித்தான், கடந்த 2019-ம் ஆண்டு அங்கு பரவிய கொரோனா வைரஸ் குறித்தும் அந்நாடு வாய் திறக்கவில்லை. இதன் காரணமாவே, உலக அளவில் கோடிக்கணக்கானோர் அந்த தொற்றுக்கு பலியாகினர்.

மருத்துவர்கள் மர்ம மரணம்
இது ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல.. அது உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் என அந்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் கடந்த 2020-ம் ஆண்டு வெளிப்படையாக தெரிவித்தனர். சில விஞ்ஞானிகள் அந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்குறிப்பிட்ட மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் சொல்லி வைத்தது போல மரணம் அடைந்தனர். இந்த மரணங்களுக்கான காரணத்தையும் சீனா கூறவில்லை. அவர்கள் சீன உளவாளிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

மரண வாசலில் விஞ்ஞானிகள், பொறியாளர்கள்
இந்நிலையில், இப்போது சீனாவில் மிக முக்கியமான மருத்துவ விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அந்நாட்டின் உயரிய அகாடமியாக கருதப்படும் சீன இன்ஜினியரிங் அகாடமியை சேர்ந்த 20 பொறியாளர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதாவது, டிசம்பர் 15 முதல் கடந்த 4-ம் தேதிக்கு இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அகாடமியில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சீனாவின் மிகப்பெரிய மேம்பாலங்கள், கட்டிடங்கள், ஆயுதங்கள், மருத்துவக் கருவிகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாரித்ததில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

"காரணம் எல்லாம் தெரியாது"
ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் மரணம் அடைந்ததை போல, கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டுக்குள் இந்த அகாடமியை சேர்ந்த 17 விஞ்ஞானிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில், விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் ஏன் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள், அவர்கள் மரணத்திற்கு பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா என பல கேள்விகள் சீனாவை சுற்றி வருகின்றன. ஆனால், சீன அரசிடம் இதுகுறித்து கேட்டால், "விஞ்ஞானிகள் மரணம் அடைந்தது உண்மைதான். அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது" என ஒரே வார்த்தையில் கூறி முடித்துவிட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications