20 லட்சம் வருடம்! கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான டிஎன்ஏ.. டைனோசர் கிட்ட நெருங்கிவிட்டோமா?
நூக்: கிரீன்லாந்தில் உலகின் மிக பழமையான DNA கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த DNA தற்போது உள்ள ஒரு சில உயிரினங்களுடன் ஒத்து போவதாகவும் கூறியுள்ளனர்.
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கிரீனாந்தில் உள்ள ஒரு நீர்நிலையின் அடியில் சில களிமண் படிமங்களை கண்டெடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சில உயிரினங்களின் DNAக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிரீன்லாந்து
இது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இதுதான் தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட DNAக்களில் மிகவும் பழமையானதாகும். இந்த DNAக்களை கொண்ட படிமங்களை டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளிடம் கொடுத்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் DNAக்களுடன் ஒத்து போகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பல ஆச்சரியமான விஷயங்கள் வெளிவந்துள்ளன. அதாவது சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிரீன்லாந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. கிரீன்லாந்து வட துருவத்தை ஒட்டி இருப்பதால் இங்கு எப்போதும் குளிரான காலநிலைதான் இருக்கும்.

விலங்குகள்
ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் குளிர் காலத்திலேயே 10 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நீடித்து வந்திருக்கிறது. எனவே இந்த வடக்கு கிரீன்லாந்து நிச்சயம் பனிப் பிரதேசமாக இருந்திருக்காது. மட்டுமல்லாது அக்காலகட்டங்களில் உலகம் முழுவதும் கார்பன்டை ஆக்ஸைடு அதிகமான அளவில் இருந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல சிதைந்த நிலையில் கிடைத்த DNAக்களை ஒருங்கிணைத்து பார்த்தபோது அது தற்போதைய காலகட்டங்களில் வாழ்ந்து வரும் கலைமான், முயல்கள், லெமிங் எனப்படும் சிரிய உயிரினம் மற்றும் யானைகளின் DNAக்களுடன் ஒத்து போகிறது. இதன் மூலம் இந்த உயிரினங்களின் மூதாதையர்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள்
அதேபோல தாவரங்களை பொறுத்த அளவில், பிர்ச், பப்பலர் உள்ளிட்ட மரங்களுடனும், பாசிகள் மற்றும் சில நுண்ணுயிர் தாவரங்களுடனும் ஒத்து போகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட DNAக்களில் பெரும்பாலானவை எந்த உயிரினத்துடனும் பொருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது அக்காலகட்டங்களில் இருந்த பல உயிரினங்கள் தற்போது இல்லை என்பதுதான் இதன் அர்த்தமாகும். இந்த ஆய்வில் மேலும் சில விஷயங்கள் விஞ்ஞானிகளை குழப்பியுள்ளது. மேற்குறிப்பிட்டதைப் போல கிரீன்லாந்தில் குளிர் காலத்திலேயே 10 டிகிரி அளவு வெப்பம் இருந்திருக்கிறது எனில் கோடைக்காலங்களில் வெப்பம் வாட்டி எடுத்திருக்கும். இவ்வளவு வெப்பத்தை அப்போது வாழ்ந்த உயிரினங்கள் எப்படி தாக்கு பிடித்திருக்கும்? என்கிற கேள்வியை இந்த DNAக்கள் எழுப்பி இருக்கின்றன.

பழைய DNA
இவற்றையெல்லாம் கண்டுபிடிக்க நீண்ட ஆய்வு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள DNAக்கள் அதிக அளவு சிதைந்து இருப்பதால் இதிலிருந்து மேலும் அதிகமான தகவல்களை பெறுவது சவாலான பணி என்னும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது, "ஜுராசிக் பார்க் சினிமாக்களில் வருவதை போல ஒரு கொசுவின் உடலிலிருந்து அப்படியே DNAவை எடுத்து டைனோசர்களை எல்லாம் நம்மால் உருவாக்க முடியாது. உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை. இதன் அர்த்தம் அனைத்தும் அழிந்துகொண்டே வருகிறது என்பதுதான். அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மாமத் எனப்படும் ஒரு வகையான யானையின் பற்களிலிருந்து சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதான பழைய DNAவை கண்டுபிடித்தோம்.

களிமண்
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட DNAக்களில் ஏறத்தாழ அனைத்தும் அழிந்துவிட்டிருந்தன. ஒருசில தகவல்கள் மட்டும் நமக்கு கிடைத்தன. 12 லட்சம் ஆண்டுகளுக்கே இப்படி எனில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட DNA 20 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பதால் நமக்கு எவ்வளவு தகவல்கள் கிடைக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஆனால் நல்வாய்ப்பாக உங்கள் கற்பனைக்கு மாறாக தற்போது கிடத்துள்ள DNAகளில் சில தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் இந்த DNA கண்டுபிடிக்கப்பட்ட நீர் நிலைதான். இந்நீர்நிலை களிமண் கலந்த வண்டல் மண் கொண்ட நீர் நிலையாகும். எனவே பனிகட்டியில் இருக்கும் DNAவை விட களிமண்ணில் இருக்கும் DNA கொஞ்சம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பில்ல ராஜா
எனவே இது எந்த வகையான களிமண் என்பதை தெரிந்துகொண்டு இதனை முழுமையாக ஆய்வு செய்தால் உலகம் முழுவதும் உள்ள இதே வகையான களிமண்ணிலிருந்து DNAக்களை நம்மால் சேகரித்து இதற்கு முன்னர் உலகம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால் எப்படியாயினும் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோர்சர்களின் DNAவை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்" என கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகின் மிக பழமையான DNA கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications