For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

22 கேரட் தங்க டீ: ஒரு கப் விலை ரூ.925 தான்

Google Oneindia Tamil News

துபாய்: தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போனாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.

தங்கத்தை ஆபரணமாக அணிந்த காலம் போய் அதை டீ போல தயாரித்து குடிக்கும் காலமும் வந்துவிட்டது.

துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘22-carat gold tea’ to kick start your mornings in Dubai

தங்க கலவை டீ

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ' விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்

22 கேரட் தங்க டீ

அதேசமயம் துபாயில் உள்ள '‘மொக்கா ஆர்ட் கபே' ஓட்டலில் தங்க ‘டீ' விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.

ஒரு கப் ரூ.925

‘மொக்கா ஆர்ட் கபே'யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர் இவர்தான் ‘தங்க டீயினை விற்பனை செய்கிறார் இந்த டீ ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும்தானம்.

இங்கிலாந்து டூ துபாய்

இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த டீயை குடித்துள்ளார் அஷ்ரப்மக்ரான். அதன் சுவை அவருக்குப் பிடித்துப் போகவே இந்த ‘டீ'யை துபாயில் அறிமுகம் செய்துள்ளார்.

இலங்கை தேயிலை

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட் தங்க பிளேட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் மொராக்கோ அனுப்பப்பட்டு டீயின் சுவை அளிக்கப்படுகிறது.

நல்லா குடிக்கிறாங்கப்பா

இந்த டீ அரபு நாட்டினர், மேற்கத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது உடல் நலத்துக்கும் நல்லது'' என்கிறார் டீ தயாரிப்பாளர்.

English summary
A cafe based in Dubai is offering ‘22-carat gold’ tea, at a price of just Dh 55 (Rs 925) a cup, claiming that it is beneficial to health. The gold tea, which was introduced around two weeks ago, is available at a promotional price at Mocca Art Cafe, the Gulf News reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X