For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவுடன் இந்தியா போட்ட 24 ஒப்பந்தங்கள்.. முழுப் பட்டியல்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா சீனா இடையே சென்னையில் அந்நாட்டு தூதரகம் அமைப்பது, ரயில்வே, கல்வி பரிமாற்றம் உள்ளிட்ட 24 வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீ கெகியாங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

24 pact has been signed between india and china

சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, கிரேட் ஹால் ஆஃப் பீப்புள் அரங்கத்தில் அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள், வர்த்தக தொடர்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

50 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை முடிவில், ரயில்வே, கல்வி பரிமாற்றம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம், சுரங்கத்துறை உள்ளிட்ட 24 ஒப்பந்தங்கள் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின.

1. சென்னையில் சீன தூதரகம் மற்றும், சீனாவின் செங்டூ நகரில் இந்திய தூதரகம்

2) இருநாட்டு மனித வளத்துறை இடையே திறன் மேம்பாடு, சமூக பாதுகாப்பு, தொழிற்கல்வி மேம்பாடு

3) சீன அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் மாநிலம் காந்திநகரில் மகாத்மா காந்தி தேசிய திறன் மேம்பாடு கல்வி மையம்

4) இந்தியா சீனா இடையே வர்த்தக ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,

5) வெளியுறவுத் துறையில் கூட்டு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

6) ரயில்வேத் துறையில் நிர்வாகத்தை மேம்படுத்த ஒப்பந்தம்

7) கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாற்றம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

8) சுரங்கம் மற்றும் கனிமத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,

9) விண்வெளித் துறையில் கூட்டு ஒத்துழைப்பு,

10) சுகாதாரம் மற்றும் பாதுகாப்கை பேண அதிக சத்துள்ள உணவுகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில் இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இடையே ஒப்பந்தம்,

11) ஒளிபரப்புத் துறையில் தூர்தர்ஷன், சீன அரசின் தொலைக்காட்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்,

12) சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளிடையே ஒப்பந்தம்,

13) இரு நாடுகளிடையே அறிவு சார் உயர்மட்ட ஆலோசனை மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

14) இந்தியாவின் நிதி ஆயோக் மற்றும் சீனாவின் மேம்பாட்டு ஆய்வு மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

15) இந்திய பூகோள அறிவியல் துறை, சீனாவின் நிலநடுக்க மேலாண்மை நிறுவனம் இடையே நிலநடுக்கம் குறித்த ஆய்வில் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்,

16) சீன கடல் வள ஆய்வுத் துறையுடன் கடல் சார் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், பருவ நிலை மாற்றம், துருவங்கள், பனிப் படலங்கள் ஆய்வில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,

17) இருநாடுகளிடையே சுரங்கத் துறையில் தொழில்நுட்பம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்,

18) மாநில மற்றும் மாகாண தலைவர்கள் கொண்ட அமைப்பை உருவாக்குவதில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்,

19) கர்நாடக மாநிலம் மற்றும் சீன மாகாணங்களுக்கிடையே உறவை வலுப்படுத்துவதில் ஒப்பந்தம்,

20) சென்னையில் துணை நகரங்களை உருவாக்குதில் ஒப்பந்தம்

21) ஐதராபாதில் துணை நகரங்களை உருவாக்குதில் ஒப்பந்தம்

22) அவ்ரங்காபாதில் துணை நகரங்களை உருவாக்குதில் ஒப்பந்தம்,

23) இந்திய கலாச்சாரத் துறை சார்பில் கலாச்சார உறவை பரிமாறுவதில் சீன பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்,

24) சீனாவின் யூனன் மின்சு பல்கலைக் கழகத்துடன் இணைந்து யோகா கல்லூரியை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

English summary
24 pacts have been signed between India and China in front of Modi and the Chinese premier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X