உலகில் 30 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்: அதில் பாதி பேர் இந்தியாவில்
லண்டன்: உலகில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் கொத்தடிமைத்தனம் அதிகம் என்று பார்ப்போம்.

இந்தியாவில் தான் பாதி கொத்தடிமைகள்
உலக அளவில் 29.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக இருந்தாலும் அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளார்களாம். அதாவது இந்தியாவில் 14 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். சீனாவில் 3 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம்.

10 நாடுகளில்
உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, எதியோபியா, ரஷ்யா, தாய்லாந்து, காங்கோ, மியான்மர் மற்றும் வங்க தேசம் ஆகிய 10 நாடுகளில் உள்ளார்களாம்.

கொத்தடிமைத்தனம்
தற்போது கொத்தடிமைத்தனம் என்றால் மக்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது, கொத்தடிமைகளாக வேலை செய்ய வைப்பது, கடன் தீரும் வரை வேலை வாங்குவது, குழந்தைகளை கடத்தி வேலை வாங்குவது உள்ளிட்டவை ஆகும்.

மொரிஷியானா
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரிஷியானா நாட்டில் மொத்தமுள்ள 3.8 மில்லியன் பேரில் 160,000 பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்.

இந்தியாவின் பிரச்சனை
இந்தியாவில் கடன் மற்றும் கொத்தடிமைகளாக வேலை செய்வது தான் பலர் அடிமைகளாக இருக்க காரணம்.

இங்கிலாந்து
ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 4,400 பேர் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications