For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலுசிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

By Madhivanan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்கள்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் மாவட்டத்தில் 27 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டரில் 5.3ஆக பதிவாகி இருந்தது.

baluch

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. பாகிஸ்தானில் கடந்த 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 73ஆயிரம் கொல்லப்பட்டிருந்தனர். அப்போது ரிக்டர் அளவில் 7.6 அலகுகளாக இது பதிவாகி இருந்தது.

இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 370 பேர் பலியாகினர். சுமார் ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 5.3-magnitude earthquake struck Balochistan province on Monday, the US Geological Survey said, but local officials said there were no immediate reports of damage or casualties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X