ரத்தம் சொட்ட சொட்ட 5 கொலை.. ஷாப்பிங் மாலில் புகுந்த மர்ம நபர்! ஆஸ்திரேலியாவில் ஷாக்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்மநபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை மாலை, இந்த ஷாப்பிங் மாலில் பயங்கர அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். முதலில் இங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் தீ பிடித்துவிட்டதாக கூறியுள்ளனர். ஒரு சிலர், துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் மாலுக்குள் நுழைந்துவிட்டதாக கூறினர். இப்படியாக பேச்சு அடிப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்கு நடுவே, மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் ஓடி வந்துள்ளார்.

அந்த மர்ம நபர், யாரையெல்லாம் பார்க்கிறாரோ, அவர்களையெல்லாம் சரமாரியாக குத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ந்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள் 5 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். துப்பாக்கியுடன் நுழைந்த போலீசார், மர்ம நபரை சுட்டிருக்கிறார்கள். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வழக்கமாக அமெரிக்காவில்தான் இதுபோன்று பொது மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். அதே பாணியில் தற்போது ஆஸ்திரேலியாவில் சம்பவம் அரங்கேறியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,
"நாங்கள் ஷாப்பிங் மாலை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஷாப்பிங் மால் உள்ளே நடக்கும் சம்பவம் குறித்து போன் கால் வந்தது. குழப்பத்தில் மாலுக்குள் நுழைந்தபோது மர்ம நபர் கையில் கத்தியுடன் ஆவேசமாக சுற்றிக்கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த கத்தியிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. இதை பார்த்தவுடன் நிலைமை சரியில்லை என்று உணர்ந்துகொண்டோம். நாங்கள் பார்த்துகொண்டிருந்தபோதே, மர்ம நபர் வேறு ஒருவரை தாக்க முயன்றார்.
எங்களுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 8 மாத குழந்தையும், அவரது தாயும் அடக்கம். நாங்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல, தாக்குதலை நடத்தியவர் யார்? பயங்கரவாதியா? அவருக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் கொலை நடந்தது? போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications