இந்திய பெருங்கடலில் விழுந்த சோவியத் விண்கலம்? ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மக்கள்
டெல்லி: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட சோவியத் விண்கலமான 'காஸ்மோஸ் 482' இன்று மதியம் வாக்கில் இந்திய பெருங்கடலில் விழுந்திருப்பதாக சீன செய்தி ஊடகமான சிஜிடிஎன் தெரிவித்திருக்கிறது.
இந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், எங்கு விழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 1972ம் ஆண்டு சோவியத் ரஷ்யா இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. ஆனால் பூமியை விட்டு போன கொஞ்ச நேரத்திலேயே இந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியவில்லை. அதை திசை திருப்பி வெள்ளி கிரகத்திற்கும் அனுப்பி வைக்க முடியவில்லை. ஏறத்தாழ 50 ஆண்டுகளாக பூமியை சுற்றி வந்த இது, இன்று பூமியில் விழும் என கணிக்கப்பட்டிருந்தது.
'காஸ்மோஸ் 482' விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அது எங்கு விழும் என்பதை சரியாக கணிக்க முடியாமல் போனது. இந்நிலையில் இந்த விண்கலம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பெருங்கடல் எனில், தென்னிந்தியாவுக்கு அருகில் விழுந்திருக்கிறது. கொஞ்சம் தப்பியிருந்தாலும், தமிழ்நாடு அல்லது கேரளா மீது விழுந்திருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக சில கணிப்புகள் இருந்தன. அதாவது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில்தான் விழும் என்று சொல்லப்பட்டிருந்தது.
பூமியின் வளிமண்டலம் மிகவும் அடர்த்தியானது. இதன் மீது பெரிய அளவுக்கு பாறை உரசினால் கூட அது எரிந்து பாதியாக காலியாகிவிடும். அப்படி பார்த்தால் இந்த விண்கலமும் எரிந்து போக வாய்ப்பு இருக்கிறதா? என்று நீஙகள் கேட்கலாம். விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமாக பதிலளித்திருக்கிறார்கள். அதாவது சூரிய குடும்பத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் வெள்ளி கிரகம்தான் மிகவும் சூடானது.
அங்கு இறங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதித வெப்பத்தை இந்த விண்கலம் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் அர்த்தம். எனவே நமது வளி மண்டலத்தில் நுழையும்போது எந்த பாதிப்பும் இதற்கு ஏற்படாது. முழுமையாக பூமி மீதுதான் மோதும். அப்படித்தான் தற்போது நடந்திருக்கிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications