For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூ கலரில் திடீர் சேஞ்ச்.. கொத்து கொத்தாக பீச்சில் திமிங்கலங்கள்.. சாத்தம் தீவில் பரபரப்பு..!

500 ப்ளூ கலர் திமிங்கலங்கள் நியூசிலாந்து தீவில் கரை ஒதுங்கி உள்ளனவாம்

Google Oneindia Tamil News

வெலிங்டன்: கொத்து கொத்தாக திமிங்கலங்கள் இறந்து கிடந்தது, நியூஸிலாந்து நாட்டில் அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகின்றன.. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் பரவின.

பொதுவாக திமிங்கலங்கள் அதிகமாக காணப்படுவது ஆஸ்திரேலியா நாட்டில்தான்.. அதேபோல இங்கு அடிக்கடி திமிங்கலங்கள் இறப்பதும் நிகழ்வதுண்டு.
டாஸ்மேனியா என்ற தீவில் அமைந்துள்ள மேக்வாரி என்ற துறைமுகத்துக்கு அருகே சமீபத்தில் நிறைய திமிங்கலங்கள் இறந்துகிடந்தன. ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை கிளப்பியது..

ப்ளூ கலரில் மாறிய ஹார்பர்.. கொத்து கொத்தாக திமிங்கலங்கள்.. என்ன நடந்தது?.. மேக்வாரியில் பரபரப்பு..!ப்ளூ கலரில் மாறிய ஹார்பர்.. கொத்து கொத்தாக திமிங்கலங்கள்.. என்ன நடந்தது?.. மேக்வாரியில் பரபரப்பு..!

 ஷாக் ஷாக்

ஷாக் ஷாக்

அதில், கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், பக்கெட்டுகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் மீட்பு பணியினர் ஈடுபட்டனர்.. ஆஸ்திரேலியாவில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் இப்படித்தான், டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இப்படி கரைஒதுங்கியுள்ள திமிங்கலங்கள் பைலட் வகையை சேர்ந்ததாம்.. சுமார் 6 மீட்டர் வரையில் வளரக்கூடிய இந்த வகை திமிங்கலங்கள் இவை..

 ப்ளூ கலர் திமிங்கலம்

ப்ளூ கலர் திமிங்கலம்

அந்த சுறாக்களை தடுப்பது அவ்வளவு எளிது கிடையாது என்கிறார்கள் அதிகாரிகள்... அநேகமாக உணவை தேடி இந்த திமிங்கலங்கள் கரைக்கு வந்திருக்கலாம் என்றும் இறந்துபோன திமிங்கலங்களை தேடி சுறாக்கள் படையெடுத்து வந்துவிடுவதால் அதை விரட்டுவது பெரும்பாடு என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்நிலையில், தற்போது நியூசிலாந்தின் சாத்தம் தீவில் திமிங்கலங்கள் ஏராளமாக இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.. இந்த தீவில் 800-க்கும் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள்.

 250, 240 சுறாக்கள்

250, 240 சுறாக்கள்

இந்த தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் ஏராளமான சுறாக்கள் இருப்பதால், இத்தீவு மிகவும் சவாலான பகுதியாகும்.. சாத்தம் தீவில் 2 நாட்களுக்கு முன்பு சுமார் 250 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின... பிறகு, நேற்றைய தினம் அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன... சுறாக்களின் தாக்குதலினால் இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக கூறுகிறார்கள்.. இந்தத் தீவு நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் கடற்கரையிலேயே விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

 புரியாத புதிர்

புரியாத புதிர்

சாத்தம் தீவிலும், இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது புதிது கிடையாது.. கடந்த மார்ச் மாதம், ஃபேர்வெல் ஸ்பிட் அருகே உள்ள கடற்கரையில் 31 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. கடந்த ஆண்டு, 50-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் காயங்களுடன் கரை ஒதுங்கிய நிலையில், 28 திமிங்கலங்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றினர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில், 700-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், 250 திமிங்கலங்கள் உயிரிழந்தன.

 மர்ம பீச்

மர்ம பீச்

கடந்த 1918-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாம்.. எப்போதுமே இந்த சாத்தம் தீவில் 50 திமிங்கலங்கள் வரை கரை ஒதுங்குவது மிகவும் சாதாரண விஷயமாம்.. உணவுக்காக கரைக்கு அருகில் வரும்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றாலும், இந்த திமிங்கலங்கள் ஏன் உயிரிழக்கின்றன என்பது மட்டும் இதுவரை புரியாத புதிராக உள்ளதாம்.. ஆராய்ச்சியாளர்களாலேயே இந்த மர்மத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்..!!

English summary
500 pilot whales died and mass stranded on remote new zealand islands, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X