ஈராக்கில் குண்டுகள் நிரப்பிய டிரக்கை வெடிக்கச் செய்த ஐஎஸ் தீவிரவாதி: 51 பேர் பலி, 70 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கின் பாபில் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஈராக்கின் பாபில் மாகாணத்தில் இருக்கும் ஹில்லா நகரின் அல் அதார் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை டிரக் ஒன்று வந்தது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த டிரக்கை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் தனது உடல் மற்றும் வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 பேர் பலியாகினர். மேலும் சோதனைச்சாவடியில் வரிசையாக காரில் காத்திருந்த பொது மக்கள் 28 பேர் பலியாகினர். சோதனைச்சாவடி பகுதியில் இருந்த 70 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அந்த சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த பல கார்கள் எரிந்து நாசமாகின. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 28ம் தேதி சதர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 78 பேர் பலியாகினர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சோதனைச்சாவடிகள், மார்க்கெட்டுகள், காபி கடைகள், மசூதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications