ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2 என பதிவு!
டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜப்பானின் நிஷினூமோட்டிலிருந்து 54 கிமீ தொலைவில் நிலநடுக்கம் பதிவு பதிவாகியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதி என்றாலும், கரைக்கு நெருக்கமாக இருக்கிறது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

பொதுவாக கடலில் ஏற்படும் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தும். எனவே சுனாமி குறித்து நிஷினூமோட்டு மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். உலகில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது.
நம்முடைய உலகம் நில தட்டுக்களால் ஆனது. இந்த தட்டுக்களுக்கு அடியில் சூடான லாவா உருண்டை இருக்கிறது. இந்த உருண்டை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் புவியின் மேற்பரப்பில் உள்ள தட்டில் நகர்வுகள் உருவாகின்றன. இந்த நகர்வுகள் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
சில நேரம் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடிப்பால் கூட நிலநடுக்கம் ஏற்படலாம். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் அளவிடப்படுகிறது.
0 - 2.9 மிகச்சிறிய நிலநடுக்கம், பெரும்பாலும் உணர முடியாது.
3.0 - 3.9 லேசான அதிர்வு, சிலர் உணரலாம். பெரும் சேதம் ஏற்படாது.
4.0 - 4.9 மிதமான அதிர்வு ஏற்படும். கட்டிடங்கள் குலுங்கும்.
5.0 - 5.9 சிறிய கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும். பொருட்கள் கீழே விழும்.
6.0 - 6.9 பலமான நிலநடுக்கம். பழைய கட்டிடங்கள் சேதமடையும், புதிய கட்டிடங்களும் பாதிக்கப்படும்.
7.0 - 7.9 மிக அதிக அளவிலான அழிவுகளை ஏற்படுத்தும். கட்டிடங்கள் இடிந்து விழும். நிலச்சரிவு, சுனாமி போன்றவை ஏற்படும்.
8.0 - 8.9 மிகப்பெரிய பேரழிவு. கட்டிடங்கள் தரைமட்டமாகும். சுனாமி உருவாகும். ஏராளமான உயிரிழப்பு ஏற்படும்.
9.0 - 9.9 வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம். மிகப்பெரிய நிலச்சரிவுகள், கடல்சார் பகுதிகளில் சுனாமிகள் உருவாகும்.
10.0+ விஞ்ஞான ரீதியாக மிக அரிதான நிலநடுக்கம். இதன் தாக்கம் பரவலாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications