வங்கதேசத்தை 2 ஆக உடைங்க.. வடகிழக்கு மாநிலத்தை குறிவைத்த முகமது யூனுஸால் மத்திய அரசுக்கு டிமாண்ட்!
பெய்ஜிங்: தொழில் முதலீடுகளை ஈர்க்க சீனா சென்ற வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதற்கு அசாம் முதல்வர் உள்பட பல அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வங்கதேசத்தை 2 ஆக உடைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை பறந்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே தான் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் மார்ச் 26ம் தேதி 4 நாள் பயணமாக முகமது யூனுஸ் சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது இருநாடுகள் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சீனாவில் முகமது யூனுஸ் பேசியது சர்ச்சையை கிளப்பியது. சீன பிரதிநிதிகளுடன் நடந்த வட்டமேசை கூட்டத்தில், ‛‛வங்கதேசம் என்பது முதலீட்டுக்கு சிறந்த நாடாக உள்ளது. கடல்வழி போக்குவரத்து வங்கதேசத்தில் உள்ளது.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மாநிலங்கள் அமைந்திருக்கும் பகுதி முழுக்க, முழுக்க நிலத்தால் சூழப்பட்ட பகுதி. இங்கிருந்து கடலை அடைய முடியாது. இதனால் இந்த பகுதிகளில் நாங்கள் தான் கடல் பாதுகாவலர்களாக இருக்கிறோம். இந்த நில அமைப்பு என்பது நல்ல வாய்ப்பை தரும். சீனா தனது பொருளாதாரத்தை பெருக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம். இங்கு பொருட்களை உற்பத்தி செய்யலாம். சந்தைப்படுத்தலாம். உலகின் பிற பகுதிக்கும் எடுத்து செல்லலாம்'' என்று கூறினார்.
வடகிழக்கு மாநிலங்கள் மேற்கு வங்க மாநிலத்தின் கோழிக்கழுத்து பகுதியின் வழியாக சிலிகுரி காரிடார் மூலம் நம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைகிறது. இந்த கோழிக்கழுத்து பகுதி என்பது இந்தியா- வங்கதேசம் எல்லையாக வருகிறது. இதனால் வங்கதேசம் முதலீடு மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் கட்டுப்படுத்தலாம் என்பது போல் சீனாவை முகமது யூனுஸ் தூண்டிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் பேச்சுக்கு நம் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வங்கதேச அரசை வழிநடத்தும் நபர் எப்படி நம் நாட்டின் மாநிலங்கள் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்று பலரும் கொதித்துள்ளனர். இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள அசாமின் பாஜக முதல்வர் ஹமாந்த பிஸ்வா சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி ஹிமாந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛வங்கதேசத்தின் இடைக்கால அரசின் முகமது யூனுஸ், வடகிழக்கு இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை என்றும், வங்கதேசத்தை கடல் வழி பாதுகாவலராக நிலைநிறுத்துவதுவதாக கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவரது இந்த கருத்து என்பது கோழிக்கழுத்து வழித்தடத்துடன் தொடர்புடைய பாதிப்பை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
வரலாற்று ரீதியாக பார்த்தால் இந்தியாவில் உள்ள சில தீங்கு விளைவிக்கும் சக்திகள் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் இந்த பிரதான வழித்தடத்தை துண்டிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு பரிந்துரைத்தன. இதனால் கோழிக்கழுத்து பகுதி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ரயில் மற்றும் சாலைகளை உருவாக்குவது அவசியம்.
அதேபோல் திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மானிக்யா கூறுகையில், ‛‛பில்லியன் கணக்கில் செலவு செய்து புதுமையான மற்றும் சவாலான பொறியியல் ஐடியாக்களுக்கு பதில் வங்கதேசத்தை உடைத்து கடலுக்கு செல்வதற்கு சொந்தமான வழியை உருவாக்கலாம். சிட்டகாங் மலைப்பகுதிகளில் 1947 முதல் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் பழங்குடி மக்கள் இப்போதும் வசித்து வருகின்றனர். லட்சக்கணக்கான திரிபுரி, காரோ, காசி மற்றும் சக்மா மக்கள் வங்கதேசத்தில் மோசமான சூழலில் வாழ்கின்றனர். நமது தேசிய நலன் மற்றும் அவர்களின் நல்வாழ்விற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா, ‛‛இந்தியாவை சுற்றி வளைக்க வங்கதேசம், சீனாவை அழைத்துள்ளது. வங்கதேச அரசின் இந்த அணுகுமுறை நமது வடகிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானது. மணிப்பூரை மத்திய அரசு கவனிக்கவில்லை. சீனா ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தில் கிராமங்களை குடியேற்றியுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. வங்கதேசம் உருவாவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. ஆனால் இன்று நமக்கு எதிராக அணி திரள்வதில் வங்கதேசம் ஈடுபட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications