சிரியாவில் ஷியா தர்கா அருகே ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல்: 71 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ஷியா தர்கா அருகே ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் 71 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ளது சய்யிதா ஜெயினப் தர்கா. ஞாயிற்றுக்கிழமை அந்த தர்காவுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது ஒரு காரில் இரண்டு ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் அங்கு வந்தனர்.

அதில் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கி வந்து மக்களுடன் மக்களாக நின்றார். தர்கா அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் காரில் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதையடுத்து மக்களுடன் மக்களாக நின்றிருந்த தீவிரவாதியும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 71 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களில் தர்கா அருகே இருந்த ஆறு மாடி கட்டிடம் சேதம் அடைந்தது. சய்யிதா ஜெயினப் தர்காவில் நபிகள் நயாகத்தின் பேத்திகளில் ஒருவரின் சமாதி உள்ளது. இதை ஷியா பிரிவு முஸ்லீம்கள் புனித தலமாக கருதுகிறார்கள். இந்த தர்காவுக்கு சிரியா தவிர்த்து ஈரான், லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமான ஷியா முஸ்லீம்கள் வருவது வழக்கம்.
முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தர்கா அருகே நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 4 பேர் பலியாகினர், 13 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications