துண்டு நிலத்தில்.. துண்டு துண்டான பாலஸ்தீன மக்களின் உடல்கள்! காசாவில் உயிர் பலி அதிகரிப்பு
காசா: காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 950 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்து. இதான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கான வாக்கெடுப்பில் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தனிக்கதை.

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சொச்சமான நிலப்பரப்பில் காசாவும் ஒன்று. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பாலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர். எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது.
இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன. அப்படிதான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

காசாவை சுற்றி இஸ்ரேல்தான் இருக்கிறது. காசாவுக்கு தண்ணீர், மின்சாரம் என எது வேண்டுமானாலும் அது இஸ்ரேலின் கரிசனம் இல்லாமல் கிடைக்காது. ஆனால் ஹமாஸின் தாக்குதலையடுத்து தற்போது இவையாவும் கட் செய்யப்பட்டுள்ளன. காசா மக்களிடையே குடிநீருக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் தற்போது 950 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருபுறம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மறுபுறம் மருந்துகளை கொண்டு வந்த டிரக்குகள் இஸ்ரேல் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. அதேபோல இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications