For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெண்டகி.. சிக்கனுக்கு மட்டும் இல்ல.. விதம் விதமான குதிரைக்கும் ரொம்ப பேமஸ் !

Google Oneindia Tamil News

கெண்டகி: நம்ம ஊரில் கேஎப்சி சிக்கன் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த சிக்கன் சுவைக்காக வெள்ளிக்கிழமை தோறும் அந்த கடையை விசிட் செய்பவர்கள் நகர்ப்புறங்களில் ஏராளம்.

அந்த கேஎப்சி சிக்கன் அமெரிக்காவில் இருந்து வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். கென்டக்கி பிரைட் (பொறித்த) சிக்கன் என்பதே அதன் விரிவாக்கம். ஆமா கேஎப்சி சிக்கன் பாக்ஸிலும் சிரித்துக்கொண்டிருக்கும் தாத்தா இந்த கடையை முதன் முதலில் ஆரம்பித்த இடம் அமெரிக்காவில் உள்ள கென்டக்கி தான். அந்த ஊரைத் தான் இன்று சுற்றி பார்க்கப் போகிறோம்.

கென்டக்கி ஊரில் கேஎப்சி சிக்கன் மட்டும் பிரபலம் இல்லை. இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த உலகிலே முதல் இடத்திலுள்ள மிகப் பெரிய குதிரை பண்ணை அங்கு தான் அமைந்திருக்கிறது. அந்த குதிரைப் பண்ணையை விசிட் அடிக்கப் போறோம்.

ஜாலியா குதிரை வண்டி

ஜாலியா குதிரை வண்டி

மிகப் பெரிய இந்த குதிரைப் பண்ணையை நாம் நடந்து சுற்றி பார்க்க முடியாது. அதனால் குதிரை வண்டியிலே நம்மை அழைத்து செல்கிறார்கள். ஜாலியா குதிரை வண்டியில் அமர்ந்து வழிகாட்டும் சொல்லும் விவரங்களை ரசித்துக் கேட்டுக்கொண்டு ஜாலியாக போகலாம்.

வெற்றி வீரர்கள்

வெற்றி வீரர்கள்

அது மட்டுமா உலகப் பெருமை மிகு குதிரைப் பந்தயத்தில் பரிசு வாங்கிய வெற்றி வீர்கள் அதாங்க வெற்றி சூடிய வேர்ல்ட் சாம்பியன் குதிரைகள் எல்லாம் இங்கு தான் இருக்கிறது. நாம் அவற்றை எல்லாம் பார்க்கலாம். இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் ஒவ்வொரு குதிரைக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு அதற்கு ஒரு பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் பாருங்க. போனி டோனி னு சூப்பரா செல்லமா ஸ்டைல் பெயர்.

குதிரையா பிறந்திருக்கலாம்

குதிரையா பிறந்திருக்கலாம்

அது மட்டுமா. அவர்கள் எந்த ஆண்டு உலக குதிரை பந்தயத்தில் எத்தனை முறை சாம்பியன் கப் வென்றவர்கள் என்று தகவல் போட்டப்பட்டிருக்கிறது. அதோடு நின்றுவிடவில்லை. அந்த குதிரை அதோட வாழ்நாளில் போட்டியில் ஜெயித்து வென்றிருக்கும் தொகையை அது மொத்த வாழ்நாள் முழுக்க சம்பாதித்த தொகை என்று போட்டிருக்கும் தொகையை பார்த்தா நாம் வாயை பிளப்போம். பேசாம குதிரையா பிறந்திருக்கலாம் போல என்று தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கு. அம்மாடியோவ் அவ்வளவு பெரிய தொகை

வயது முதிர்வில் ஓய்வெடுத்து

வயது முதிர்வில் ஓய்வெடுத்து

இந்த குதிரைகள் ஒவ்வொரு நாட்டிலுள்ள சிறப்பு வாய்ந்த குதிரைகள் எல்லாம் எல்லாம் பேஷன் ஷோ போல ரவுண்டு போகிற ஷோ இருக்கு. இந்த குதிரைகள் சாம்பியன் கப் வாங்கிய போட்டிகளை வீடியோவில் காட்டி முடித்து விட்டு சாதித்து வயது முதிர்வில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் அந்த வயதான குதிரைகளை கூட்டி வந்து முன்னிறுத்தி எல்லோரும் ஜோரா கைதட்டி மரியாதை செலுத்துறாங்க. குதிரைக்கு புரியுமோ இல்லையோ அவங்க செய்ற விஷயம் சூப்பர். அப்புறம் குதிரை சவாரி, குட்டி பிள்ளைங்களுக்குசின்ன குதிரை சவாரி என்று ஒரு நாள் முழுக்க குதிரை கூட வாழலாம்.

வண்டி வண்டி குதிரை வண்டி

அது மட்டுமா பழைய காலத்து வகை வகையா குதிரை வண்டி , குதிரை அருங்காட்சியகம்.... இறந்த குதிரை மண்டை ஓடு , முழு எலும்புக்கூடு கூட என்று குதிரை சம்பந்தமான அத்தனையும் கென்டக்கி குதிரை பண்ணையில் பார்க்கலாம். சரி வாங்க ஜாலியா இப்போ நீங்களும் அந்த குதிரைப் பண்ணையை விசிட் அடித்து அந்த சாம்பியன்ஸ் எல்லோரையும் இந்த வீடியோவில் மீட் பண்ணுங்க.

- Inkpena சஹாயா

English summary
Here is the world's no.1 horse farm tour from the place where KFC chicken originated ie. KENTUCKY in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X