அப்பாவுக்காக வாங்கியிருக்க கிஃப்ட்ட எவ்வளவு அழகாக சொல்லுது பாருங்க இந்த க்யூட் குட்டி பாப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தந்தையர் தினத்தில் தனது அப்பாவுக்கு வாங்கியிருக்கும் கிஃப்ட் குறித்து குட்டி பாப்பா கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது அப்பாவுக்கு தான் கொடுக்க இருக்கும் பரிசு பிடிக்குமா என்றும் அந்த குட்டிப்பாப்பா குழப்பத்துடன் பேசுவதை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.

தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் தந்தையர் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்புக்குரிய அப்பாவுக்கு என்ன பரிசளிப்பது என ஷாப்பிங் செய்வது அப்பிள்ளைகளின் பெரும் குழப்பமாக உள்ளது.

அப்பாவுக்காக கிஃப்ட்

அப்பாவுக்காக கிஃப்ட்

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு குட்டி பாப்பா ஒன்று தனது அப்பாவுக்கு தந்தையர் நாளில் பரிசளிக்க வாங்கியுள்ள கிப்ட் குறித்து அவ்வளவு அழகாக விளக்கியுள்ளது. கூடவே தான் வாங்கியிருக்கும் கிப்ட் தனது அப்பாவுக்கு பிடிக்குமா என்ற குழப்பதையும் முக பாவனைகளுடன் அந்த குட்டி பாப்பா வெளிப்படுத்தியிருக்கிறது.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

இந்த வீடியோவை அந்த பாப்பாவின் அம்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் அந்தப் பாப்பாவின் பெயர் மிலா ஸ்டாஃபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மா கொடுத்த ஐடியா

அம்மா கொடுத்த ஐடியா

தந்தையர் தினத்துக்காக தனது அப்பாவுக்கு என்ன பரிசு கொடுப்பது என குழம்பிய அந்த பாப்பாவுக்கு, அவரது அம்மா ஒரு ஐடியா கொடுத்தாராம். அதாவது ஒரு வினைல் ரெக்கார்டரில் அவரது அப்பாவுக்கு பிடித்த பாடல்களையெல்லாம் பதிவேற்றம் செய்து கொடுக்கலாம் என்பது தான் அந்த யோசனையாம்.

ஏதோ வீல் போல் இருக்கே

ஏதோ வீல் போல் இருக்கே

அதன்படி அந்த ஒரு வினைல் ரெக்கார்டரை வாங்கி வைத்துள்ள அந்த பாப்பா, இது ஏதோ வீல் போல் உள்ளது. எது எப்படி பிளே ஆகும்? இது எப்படி பாடும்? இதில் சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளதா என ஏராளமான கேள்விகளை கேட்டுள்ளது.

அப்பாவுக்கு பிடிக்குமா?

இது தனது தந்தைக்கு பிடிக்குமா என்றும், இதனை கொடுத்தால் தனது தந்தை எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் அழகிய முக பாவனைகளுடன் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A mother uploaded a Video on Instagram. The little girl who has gained quite a huge fan following for her dramatic videos — is also confused as to how she can surprise her dad.
Please Wait while comments are loading...