Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ளையிங் கிஸ்.. கண்ணாலே சிக்னல்.. சிம்பன்சியிடம் காதலில் விழுந்த பெண்.. விழிபிதுங்கிய ஸூ ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

ப்ரூசெல்ஸ்: பெல்ஜியத்தில் சிம்பன்சி ஒன்றிடம் பெண் காதலில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் உருக்கமான காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 வருடமாக சிம்பன்சி ஒன்றும், பெண்ணும் காதல் செய்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

காதலியே கிடைக்காமல்.. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என்று 90ஸ் கிட்ஸ் பலர் சிங்கிளாக சுற்றி வரும் நிலையில் பெல்ஜியத்தில் இருக்கும் சிம்பன்சி குரங்கு ஒன்று உயிரியல் பூங்காவிற்கு வரும் பெண்ணுடன் காதலில் விழுந்து இருக்கிறது. காதலில் விழுந்ததோடு மட்டுமின்றி 4 வருடமாக கண்ணடித்து, ப்ளையிங் கிஸ் கொடுத்து ஜாலியான ரிலேஷன்ஷிப்பிலும் இருந்துள்ளது... என்னடா இது கிங் பட கதை மாதிரி இருக்கே என்று கேட்கிறீர்களா?

இது கதை அல்ல.. பெல்ஜியத்தில் உள்ள அன்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம். அங்கு இருக்கும் 38 வயது நிரம்பிய சிட்டா என்ற சிம்பன்சிதான் நமது கதையின் காதல் நாயகன்.

காதல் நாயகன்

காதல் நாயகன்

பூங்காவில் தனியாக கம்பிகளுக்கு பின் சுற்றி திரிந்த சிட்டா சிம்பன்சிக்கு மற்ற பெண் சிம்பன்சிகளை பார்த்தாலே ஆகாது. உங்களை எல்லாம் எனக்கு பிடிக்கல.. எனக்குன்னு ஒரு கனவு கன்னி வருவா என்று அந்த சிம்பன்சியும் தனது 34 வயது வரை 96 பட ராம் போல தனியாக இருந்தது. கடைசி வரை சிட்டாவிற்கு பிடித்த அந்த பெண் சிம்பன்சி வரவே இல்லை. அப்போதுதான் கூண்டிற்கு வெளியே.. அழகிய மாடல் போல வந்த அடி டிம்மர்மான்ஸ் என்ற பெண்ணை பார்த்ததும் சிட்டா காதலில் விழுந்தது.

காதல் நாயகன்

காதல் நாயகன்

பூங்காவில் தனியாக கம்பிகளுக்கு பின் சுற்றி திரிந்த சிட்டா சிம்பன்சிக்கு மற்ற பெண் சிம்பன்சிகளை பார்த்தாலே ஆகாது. உங்களை எல்லாம் எனக்கு பிடிக்கல.. எனக்குன்னு ஒரு கனவு கன்னி வருவா என்று அந்த சிம்பன்சியும் தனது 34 வயது வரை 96 பட ராம் போல தனியாக இருந்தது. கடைசி வரை சிட்டாவிற்கு பிடித்த அந்த பெண் சிம்பன்சி வரவே இல்லை. அப்போதுதான் கூண்டிற்கு வெளியே.. அழகிய மாடல் போல வந்த அடி டிம்மர்மான்ஸ் என்ற பெண்ணை பார்த்ததும் சிட்டா காதலில் விழுந்தது.

கிங் காங்

கிங் காங்

கிங் காங் படத்தில் எப்படி குரங்கு மனித குலத்தை சேர்ந்த பெண் மீது காதலில் விழுமோ அதேபோல் அடி டிம்மர்மான்ஸ் என்ற பெண்ணை பார்த்ததும் சிம்பன்சி சிட்டாவும் காதலில் விழுந்தது. கூண்டிற்கு வெளியே நடந்து சென்ற தேவதை அடி டிம்மர்மான்ஸ் பார்த்ததும்.. கையை தூக்கி சிட்டா ஹாய் காட்ட.. கண்ட உடன் அடி டிம்மர்மான்ஸுக்கும் காதல் வந்துவிட்டது. ஆம் சிட்டாவுடன் டிம்மர்மான்ஸும் காதலில் விழுந்து இருக்கிறார். ஏனோ அந்த சிம்பன்சியை பார்த்ததும் இந்த பெண்ணுக்கும் பிடித்து இருக்கிறது.

காதல் வளர்ந்தது

காதல் வளர்ந்தது

அதன்பின் வாரம் ஒருமுறை, சில சமயம் வாரம் இருமுறை என்று அந்த பெண் சிட்டா சிம்பன்சியை வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார். ஒவ்வொரு முறை வரும்போதும் குரங்கிற்கு அருகே சென்று கூண்டிற்கு வெளியே நின்று சைகையாலே டிம்மர்மான்ஸ் பேசி இருக்கிறார். கண் அடிப்பது, ப்ளையிங் கிஸ் கொடுப்பது, சிரித்துக்கொள்வது என்று இவர்களின் லவ் "கூண்டை தாண்டி வருவாயா" என்ற தலைப்பில் படமே எடுக்கும் அளவிற்கு ஜாலியாக சென்று இருக்கிறது.

 எத்தனை வருடம்

எத்தனை வருடம்

அதிலும் இந்த காதல் ஒருவருடம், இரண்டு வருடம் எல்லாம் செல்லவில்லை. தொடர்ந்து நான்கு வருடங்கள் இவர்கள் காதலித்து உள்ளனர். வாரம் தவறாமல் என்ன நடந்தாலும் அந்த பெண் சிம்பன்சியை பார்க்க தவறாமல் வந்துவிடுவார். சிம்பன்சியும் சரியாக அந்த பெண் வரும் நாள் அன்று கம்பிகளுக்கு அருகே அழகாக காத்து இருக்கும். இந்த பெண்ணை தொடக்க காலத்தில் பூங்கா நிர்வாகிகள் கவனித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரிதாக சந்தேகம் எதுவும் வரவில்லை.

குரங்கு சேட்டை

குரங்கு சேட்டை

அதோடு பூங்காவில் இருக்கும் குரங்குகள் பொதுவாக பெண்களை பார்த்தாலே சில்மிஷம் செய்வது வழக்கம். பல பூங்கா குரங்குகள் பெண்களிடம் மோசமாக நடந்த சம்பவங்களும் இதற்கு முன் நடந்து இருக்கிறது. இதனால் இரண்டு பேரும் காதல் செய்கிறார்கள் என்ற கோணத்தில் பூங்கா நிர்வாகிகள் நினைக்கவே இல்லை. விலங்குகள் மீதான அன்பாக இருக்கலாம் என்று நம்பி இருக்கிறார்கள்.

 முறிந்தது

முறிந்தது

பாவம் யார் கண் பட்டதோ இவர்களின் காதல் விளையாட்டு பூங்கா நிர்வாகிகளுக்கு தெரிந்துவிட்டது. வார வாரம் இந்த பெண்ணை கவனித்த நிர்வாகிகள், சிசிடிவி மூலம் இவர்களின் காதல் விளையாட்டை கண்டுபிடித்தனர். அதோடு.. என்ன குரங்கிற்கும் மனித பெண்ணுக்கும் காதலா என்று கோபத்தின் உச்சிக்கு போன நிர்வாகிகள் உடனே அந்த பெண் உயிரியல் பூங்கா வருவதில் இருந்தும் தடை விதித்தனர். இதற்கு அந்த பூங்கா நிர்வாகிகள் சொன்ன காரணம்தான் மாஸ்.

 காரணம்

காரணம்

அந்த பெண் வருவதால்.. இந்த சிட்டா சிம்பன்சி குரங்கிற்கு மற்ற பெண் சிம்பன்சிகள் மீது விருப்பமே இல்லை. மற்ற பெண் சிம்பன்சிகளுடன் இந்த சிட்டா இணைந்து இனப்பெருக்கம் செய்யாமல் இருக்கிறது. இதற்கு அந்த பெண்தான் காரணம் என்று கூறியுள்ளனர். அதோடு மனித குலத்தோடு காதல் செய்வதால் மற்ற சிம்பன்சிகளின் சிட்டாவை ஒதுக்கி வைத்துட்டதாம். மற்ற சிம்பன்சிகள் யாரும் சிட்டாவுடன் விளையாடுவது இல்லை என்றும் புகார் சென்றுள்ளது.

விளக்கம்

விளக்கம்

இதன் காரணமாகவே அந்த பெண் பூங்காவிற்கு செல்வதில் இருந்து தடை பெற்று இருக்கிறார். இதற்கு அந்த பெண் கொடுத்த விளக்கம் அதற்கு மேல்.. நான் சிட்டாவை காதலிக்கிறேன். எனக்கு என்று யாருமே இல்லை. எனக்கு இருப்பது சிட்டாதான். அவனையும் என் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி சரியாகும்? எனக்கு அவனிடம் நிறைய அன்பு இருக்கிறது. எனக்கு இப்படி தடை விதிப்பது தவறு என்று அந்த பெண் வருத்தத்தோடு பேட்டி அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+