ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விமானம்! ரன்வேயில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு! ஜப்பானில் ஷாக்
டோக்கியோ: கிழக்கு ஜப்பானில் உள்ள மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா போட்ட குண்டு என்றும், தற்போதுதான்வெடித்திருக்கிறது எனவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானுக்கு அமெரிக்காதான் எமனாக இருந்தது. ஜப்பான் வசம் வலுவான விமானப்படை இருந்தது. எனவே, அண்டை நாடுகளில் இருந்த ராணுவ தளத்திற்கு எளிதாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொண்டு சேர்க்கப்பட்டது. இந்த பணியை செய்ய மியாசகி விமான நிலையம் மிகவும் பொருத்தமாக இருந்தது. எனவே, போர் சமயத்தில் இதனை ஜப்பான் முழுமையாக பயன்படுத்தியது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அமெரிக்கா, மியாசகி விமான தளத்தை அழிக்க முடிவெடுத்தது.

அதன் மீது சரமாரியான குண்டுகள் வீசப்பட்டன. இதில் சில குண்டுகள் அப்படியே மண்ணுக்கு அடியில் புதையுண்டு போனது. போர் முடிந்த பின்னர், இந்த விமான நிலையத்தை ஜப்பான் வணிக ரீதியாக பயன்படுத்த தொடங்கியது. புதிய ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. அன்று முதல் நேற்று வரை இந்த விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் பயன்படுத்தின.
இந்நிலையில் நேற்று இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. எனவே, உடனடியாக இந்த விமான நிலையத்திற்கு வரும் அத்தனை விமானங்களும் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. பின்னர் ஜப்பான் ராணுவம், வெடி விபத்து குறித்து ஆய்வை தொடங்கியது.

ஆய்வில் வெடித்தது இரண்டாம் உலகப்போர் காலத்தில், அமெரிக்கா வீசிய குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வெடி விபத்து நடந்த இடம் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விமான நிலையத்தில் இன்னும் வெடிக்காத குண்டுகள் ஏதும் மிச்சம் இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு, அப்படி குண்டு இருப்பின் அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும் என ஜப்பான் ராணுவம் கூறியிருக்கிறது.
தற்போது குண்டு வெடித்தபோது, விமானங்கள் எதுவும் அந்த ஓடுதளத்தில் இருக்கவில்லை. எனவே, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டை வீசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications