அடுத்த 33 வருஷத்துக்கு.. இதைத்தான் செய்ய போறேன்! பெரிய பிளானை மலேசியாவில் வைத்து ஓபனாக சொன்ன விஜய்!

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், இறுதியாக ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பேசிய விஜய், "எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக,அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜனநாயகன் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும், அவருடைய அரசியல் வருகையாலும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், இன்று ஆடியோ லான்சில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

jana nayagan vijay malayasia

முன்னதாக இந்த விழாவில் பேசிய இயக்குநர்கள் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். குறிப்பாக நடிகர் நாசர் பேசுகையில், "என்னுடைய மகனை எழுந்து நடக்க வைத்தது விஜய்தான். அவர் நிச்சயம் நடிக்க வேண்டும். விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் தாங்கி கடந்து செல்பவர்தான் விஜய். அதனால் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

அதேபோல இயக்குநர் அட்லி பேசுகையில், "எந்த சூப்பர் ஸ்டாரும் செய்யாத விஷயத்தை விஜய் செய்திருக்கிறார் என இயக்குநர் அட்லி பாராட்டு. உதவி இயக்குநராக இருந்த என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் விஜய். அவர் நல்ல மனிதர்.

one last time.. விஜய் எல்லாவற்றையும் one last time என செய்திருக்கிறார். அனைத்தையும், இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். ஐபிஎஸ் விஜயகுமார், தளபதி வெற்றிமாறன், ராயப்பன் என அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியாக ஒருமுறை என்றே செய்திருக்கிறார். அந்த வரிசையில் ஜனநாயகனும் one last time என இருக்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் பேசுகையில், "ஆடியோ லான்ச் என கூப்பிட்டார்கள். இங்கு வந்து பார்த்தால் அர்ஜென்டினா மேட்ச் போல கூட்டம் இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் பீஸ்ட் படத்தில் செய்த தவறை திருத்திக்கொள்வேன்" என்று பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+