ஒரே அலறல்.. துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆப்கன் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டும் தாலிபான்
ஆப்கன் பெண்களை தாலிபான்கள் சவுக்கால் அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது
காபூல்: முன்னாள் அரசு அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும் தாலிபான்கள் கார்களில் கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.. சில பெண்களை தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் வீடியோவும் வெளியாகி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.
பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது...

கல்வி
"யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தாலிபன்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை.. நாளுக்கு நாள் திடீர் திடீர் திருப்பங்கள் அங்கு நடந்து வருகின்றன.. பெண்களுக்கான தாக்குதல்கள் அதிகமாகி வரும் சூழலில், அந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு குறித்த பீதியும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் இனி பல்கலைக்கழகங்கள், லைப்ரரிகள், கல்விக்கூடங்கள் என்னாகும் என்றும் கவலையும் எழுந்துள்ளது.

பீதி
எந்த மாதிரியான ஆட்சி கட்டமைக்கப்படும் என்பது இதுவரை உறுதியாக தெரியாவிட்டாலும், அவர்கள் விதித்து வரும் கடுமையான சட்டங்களுக்கிடையே அந்த நாட்டு பெண்களின் நிலை என்னாகும் என்ற கேள்வியும் சூழ்ந்துள்ளது. அதிலும், இப்போது தாலிபான்கள் ஆட்சி அமைத்தும் விட்டனர்.. தாலிபான்களை அன்று எதிர்த்தவர்கள் யார் யாரென்று தேடி தேடி வேட்டையாடப்பட்டு வருகிறார்களாம்.

நடவடிக்கை
அந்த வகையில், முன்னாள் ராணுவத்தினர், நாட்டோ படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தியர்களை தேடி சென்று பழிவாங்கும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வருகின்றன.. அதுமட்டுமல்ல, காபூலில் முன்னாள் அரசு அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும், அள்ளி சென்று கார்களில் வைத்து கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ
மற்றொருபுறம், சம உரிமை கேட்கும் பெண்களின் போராட்டத்தை, தாலிபான்கள் தடை செய்துவிட்டனர்.. மேலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களை தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உலகமக்களை பதற வைத்து வருகிறது.. வேலைவாய்ப்பையும் இழந்து கையில் காசு இல்லாமல் மக்கள் அவதியிலும் உள்ளனர்.

பயிற்சிகள்
பொழுது போக்கு பூங்காக்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டமே காணோம்.. இவ்வளவு காலம் அங்குள்ள பூங்காக்களில் நிம்மதியாக நடமாடி வந்த மக்கள், இப்போது வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர்.. காலியாக கிடக்கும் அந்த பூங்காக்களில், தாலிபான்கள்தான் விளையாடி கொண்டிருக்கிறார்கள்.. கடை வீதிகளிலும் துப்பாக்கி சூடு பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்... இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications