பிரபலங்களை கொல்ல சதி: சுபியானை அடுத்து மேலும் 3 தீவிரவாதிகளை நாடு கடத்தும் சவுதி
ரியாத்: லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த அபு சுபியானை அடுத்து இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜெயினுல் ஆபிதீன் என்பவரை சவுதி அரேபியா நாடு கடத்த உள்ளது.
தேசிய புலனாய்வுத் துறை சவுதி அரேபியாவில் இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சுபியானை நாடு கடத்துமாறு சவுதி அரசை கேட்டுக் கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று சவுதி அரசு சுபியானை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சுபியான் மும்பை அழைத்து வரப்பட்டு அங்கிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.

கர்நாடகாவில் பத்திரிக்கையாளர்கள் உள்பட பல பிரபலங்களை கொலை செய்யத்திட்டமிட்ட வழக்கில் சுபியான் தேடப்பட்டு வந்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேசிய புலனாய்வுத் துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வுத் துறையினரின் வேண்டுகோளின்படி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஜெயினுல் ஆபிதீன் என்பவரை நாடு கடத்த உள்ளது சவுதி அரசு. மேலும் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இரண்டு பேரும் சவுதியில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தது, ஹைதராபாத் சாய் பாபா கோவில் குண்டுவெடிப்பு, ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் மற்றும் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டது ஆகிய வழக்குளை தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள். லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பலர் சேர்ந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பத்திரிக்கையாளர்கள் உள்பட பல பிரபலங்களை கொலை செய்ய தீட்டிய சதி திட்டத்தை 2011ம் ஆண்டு பெங்களூர் போலீசார் முறியடித்தனர்.
இந்த வழக்கை பெங்களூர் போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டது. இந்தியாவில் உள்ள பல பிரபலங்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரிய வந்தது. சுபியான், ஆபிதீன் மற்றும் 3 பேர் ரியாத்தில் கூடிப் பேசி பிரபலங்களை கொலை செய்ய சிலருக்கு உத்தரவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications