டிரம்ப் வைத்த ஆப்பு.. கதறியபடி இந்தியா, சீனாவிடம் உதவி கேட்கும் முகமது யூனுஸ்! கசிந்த பரபரப்பு தகவல்
டாக்கா: நம் நாட்டிடம் தொடர்ந்து மோதி வரும் வங்கதேசம் தற்போது சரணடைய தொடங்கி உள்ளது. வங்கதேச தலைநகரில் களமிறங்கிய தீவிரவாதிகளாலும், வங்கதேசத்தை முற்றிலுமாக டொனால்ட் டிரம்ப் புறக்கணித்துள்ள நிலையில் இந்தியா மற்றும் சீனாவிடம் உதவி கேட்கும் நிலையில் முகமது யூனுஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் நெருங்கிய பந்தம் என்பது இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இப்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.

முகமது யூனுஸ் மற்றும் அவரது தலைமையிலான ஆலோசகர்களாக உள்ளவர்கள் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர். மேற்கு வங்கம், வடகிழக்கு மாநில எல்லைகளில் உளவு ட்ரோன்களை பறக்கவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதோடு பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளது. வங்கதேச வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் வங்கதேசம் சென்று வந்துள்ளனர். அதேபோல் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது முகமது யூனுஸ் வந்த பிறகு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது முகமது யூனுஸ் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். இதனால் அவர் உதவியை நாடி நம் நாடு மற்றும் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளார். அப்படி என்ன நடந்தது? முகமது யூனுஸ்க்கு எந்த மாதிரியான சிக்கல் ஏற்பட்டுள்ளது? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றபோது கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி வரை அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக இருந்தார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அதேபோல் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கும், முகமது யூனுஸ்க்கும் நெருங்கிய உறவு இருந்தது. இதனால் வங்கதேசத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசு அரவணைத்தது. அதோடு அமெரிக்கா சென்ற ஜோ பைடனுக்கு அந்த நாடு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். ஜோ பைடன் மற்றும் பில் கிளின்டனின் ஆதரவாளர் என்பதால் முகமது யூனுஸ் மீது டிரம்புக்கு விருப்பம் கிடையாது. இதனால் தான் கடந்த மாதம் கூட வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசியபோது பத்திரிகையாளர் வங்கதேசம் விவகாரம் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் ‛‛வங்கதேசத்தை பிரதமர் மோடி பார்த்து கொள்வார்'' என்று கூறினார். இதன்மூலம் வங்கதேசத்தை கணக்கிலேயே டிரம்ப் எடுத்து கொள்ளவில்லை.
டிரம்ப் அதிபரானாலும் வங்கதேசத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த முகமது யூனுஸ்க்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இப்படியான சூழலில் தான் நேற்று முன்தினம் வங்கதேசம், நம் நாடு உள்பட பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட எச்யூடி எனும் ஹிஸ்புத் தஹ்ரீர் எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் தலைநகர் டாக்காவில் ‛மார்ச் ஃபார் கிலாஃபட்' என்ற பெயரில் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் போலீசார் மற்றும் அந்த பயங்கரவாத அமைப்பினருக்கு இடையே பிரச்சனைஏற்பட்டது. இதனால் தலைநகரில் சட்டம் - ஒழுங்கு இன்னும் பிரச்சனைாக உள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வங்கதேசத்தில் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன. இதுவும் முகமது யூனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனைகளை அமெரிக்கா ஆதரவு இருந்தால் தீர்த்து விடலாம். ஆனால் டிரம்ப் வங்கதேசத்தை கைகழுவிவிட்டார். இதனால் அடுத்ததாக இருப்பது 2 சான்ஸ் தான். ஒன்று சீனா. இன்னொன்று இந்தியா. இதனால் 2 நாடுகளிடம் உதவி கோர முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி திட்டமிட்டப்படி மார்ச் 26-29 ஆகிய தேதிகளில் 3 நாள் பயணமாக முகமது யூனுஸ் சீனா செல்ல உள்ளார். அங்கு நடக்கும் BOAO Forum மாநாட்டில் அவர் பங்கேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து உதவி கோர உள்ளார். அதன்பிறகு அடுத்த மாதம் (ஏப்ரல்) பாங்காக்கில் BIMSTEC உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் நம் நாடு சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் வங்கதேசம் சார்பில் முகமது யூனுஸ்
பங்கேற்கிறார். இந்த வேளையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச முகமது யூனுஸ் சார்பில் அனுமதி என்பது கோரப்பட்டுள்ளது. அப்போதும் வங்கதேசத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முகமது யூனுஸ் உதவி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications